இன்று or நாளை மத்திய அமைச்சரவை மாற்றம்? நிர்மலா சீதாராமன் கல்வித்துறை? சக்திகாந்த தாஸ் நிதித்துறை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இணைந்து, அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது மற்றும் புதிய முகங்களைச் சேர்ப்பதற்கான இறுதிப் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகத் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nirmala sitharaman

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், நிர்வாக ரீதியான நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வரவிருக்கும் பல மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளவும் இந்த அதிரடி ஆக்‌ஷன் பிளானை மோடி அரசு கையில் எடுத்துள்ளது.

நிதி மற்றும் கல்வித்துறையில் மாற்றம்

இந்த அமைச்சரவை மாற்றத்தின் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது பொருளாதார மற்றும் கல்வித் துறைகளில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தான்.

சக்திகாந்த தாஸ் என்ட்ரி?

ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநராக இருந்து, தற்போது பிரதமரின் முதன்மைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் சக்திகாந்த தாஸ், மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதார சூழலைக் கையாண்டு, நிதித்துறையை நிர்வகிக்க திறமையான நிபுணரை கொண்டுவர மோடி விரும்புகிறார். இதனால் சக்திகாந்த தாஸ், மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமனுக்கு புதிய பொறுப்பு

தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வித்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் டெல்லியை உலுக்கியுள்ளது. அவரது நிர்வாகத் திறன் மற்றும் ஜே.என்.யூ பின்னணி ஆகியவை கல்வித்துறையைச் சீரமைக்க உதவும் என மோடி நம்புகிறாராம்.

தர்மேந்திர பிரதான் வெளியேற்றம்?

தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களால் கடும் அரசியல் விமர்சனங்களைச் சந்தித்த தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

அமித் ஷா - மோடி சந்திப்பும், ஜனாதிபதி மாளிகை தகவல்

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஜனாதிபதி மாளிகையிலிருந்து வரும் இந்த சிக்னல்கள் , புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. மேலும், தற்போதைய பாஜக தேசிய தலைவர் நிதின் நபீனின் புதிய கட்சி நிர்வாகக் குழு அமைக்கும் பணிகளும் இதனுடன் இணையாக நடக்கின்றன.

யாருக்கு வாய்ப்பு? யார் நீக்கப்படுகிறார்கள்?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜகந்நாத் சர்க்கார், சௌமித்ரா கான் மற்றும் மூத்த தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறக் கூடும். மகாராஷ்டிராவின் கூட்டணியில் இருந்து ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் ஓம்ராஜே நிம்பால்கர் ஆகியோருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தற்போதைய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் கேபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படலாம்.

கட்சிப் பணிக்கு மாறும் மூத்தவர்கள்

நீண்ட காலம் அமைச்சர்களாக இருக்கும் சிலர் மற்றும் எதிர்பார்த்த செயல்திறனை வெளிப்படுத்தாத சில ஜூனியர் அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளனர். அவர்கள் அனைவரும் 2029 பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு, கட்சிப் பணிகளை வலுப்படுத்த மாற்றப்படுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் எந்த நேரத்திலும் இந்த மெகா அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் டெல்லி தற்போதைக்கு உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+