Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி கிலோ மீட்டர் கணக்கில் கட்டணம்! நாடு முழுக்க பாஸ்ட் டாக்கில் வருது அசத்தல் மாற்றம்! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுங்கக் கட்டண முறையை மேம்படுத்தும் நோக்கில், தானியங்கி எண் பலகை அங்கீகார (ANPR) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையை தேசிய நெடுஞ்சாலை துறை அறிமுகம் செய்ய உள்ளது. இது சுங்கச் சாவடிகளில் நேர விரயத்தை குறைத்து, வருவாய் இழப்புகளைத் தடுக்க உதவும். இதில் கிலோ மீட்டர் கணக்கில் புதிய கட்டண முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிலோமீட்டர் அடிப்படையிலான கட்டணம்

இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் பயணிக்க, பயனாளர்கள் கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் புதிய கொள்கையை அரசு பரிசீலிக்கிறது. தற்போதைய முறையில், சில கிலோமீட்டர்கள் பயணித்தாலும் முழு தூரத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய முறையால் இந்த சிக்கல் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile transport

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008-இன் படி, ஒரு திட்டத்தின் கீழ் 60 கி.மீ. தூரத்திற்கு நிலையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய கொள்கை மூலம் பயனாளர்களுக்கு நியாயமான கட்டண அமைப்பு வழங்கப்படும்.

FASTag மற்றும் ANPR தொழில்நுட்பம்

FASTag தொழில்நுட்பம், ரேடியோ அதிர்வெண் அடையாளத்தை (RFID) பயன்படுத்தி பணமில்லா கட்டண வசூலை எளிதாக்கியுள்ளது. இதனை மேலும் மேம்படுத்த ANPR தொழில்நுட்பம் இதில் இணைக்கப்படும். இதன் மூலம் வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நிற்காமல், கேமராக்கள் மற்றும் FASTag ரீடர்களின் மூலம் அடையாளம் காணப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த முறையில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மின்-அறிவிப்புகள் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். கட்டணம் செலுத்த தவறினால், FASTag தற்காலிகமாக நிறுத்தப்படும் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும்.

தொழில்நுட்பத்தின் தாக்கம்

தடையற்ற சுங்க வசூல் முறையை ஊக்குவிக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் பயண நேரத்தை குறைத்து, போக்குவரத்து நெரிசலைத் தடுக்க உதவும், இது தொடர்பாக அதிகாரிகள் இந்த முயற்சி தடையற்ற கட்டண வசூலை உறுதிசெய்யும் என்றார்.

மேலும், இந்த முறை காரணமாக பாஸ்ட் டாக் ஒப்பந்தங்களில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கின்றனர்.

விரைவில் ஏலம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் ANPR-FASTag அடிப்படையிலான முறையை நிறுவ ஏலம் கோரியுள்ளது. இதன் செயல்திறன் மற்றும் பயனர் பிரதிபலிப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் இதனை விரிவாக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.

அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது.

உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும்.இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+