தமிழக டோல் கேட்களில் நடந்த அசத்தல் மாற்றம்.. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு.. குட் நியூஸ்
சென்னை: தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான்.. டோல் கேட்களில் முக்கியமான மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பொதுவாக பண்டிகை காலங்கள்.. நீண்ட விடுமுறை காலங்களில் சென்னையின் எல்லா நுழைவாயில்களும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறுவது வழக்கம். தீபாவளி விடுமுறை நெருங்குவதால் இந்த வாயில்கள் இப்போதே மூச்சுத்திணற தொடங்கி உள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வெளியே செல்வதால் தாம்பரம், செங்கல்பட்டு, ஈசிஆர் சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா வருடமும்.. எல்லா பண்டிகை தினங்களுக்கும் நடப்பது போலவே.. இந்த முறையும் சென்னையை இணைக்கும் சாலைகள் மூச்சுத்திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாட்களில் தீபாவளி பண்டிகை நடப்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
பலர் சென்னையை நோக்கி வருவதால் சென்னையின் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலால் முடங்க தொடங்கி உள்ளன. முக்கியமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் எல்லா நுழைவாயில்களும் தற்போது கடுமையாக திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான்.. டோல் கேட்களில் முக்கியமான மாற்றங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி தீபாவளியை முன்னிட்டு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏழு சுங்கச்சாவடிகளில் உள்ள பூம் தடுப்புகளை NHAI அகற்றி உள்ளது. போக்குவரத்தை எளிதாக்கும் முடிவில் இந்த தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் வாகனத்தின் அளவு வழக்கமான 35,000 இலிருந்து தினசரி 50,000 ஆக உயரும். இதனால் பூம் அகற்றப்பட்டு உள்ளது. ஆனால் வழக்கம் போல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NHAI தெளிவுபடுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்: எதிர்காலத்தில் இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கவே.. மதுரை - திருச்சி - சென்னை இடையே எக்ஸ்பிரஸ்வே அமைய உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் இன்னும் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் தொடங்கவில்லை. ஜூலை 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், சென்னை, திருச்சி மற்றும் மதுரை இடையே கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையை ₹26,500 கோடி மதிப்பீட்டில் NHAI அமைக்க உள்ளது. சென்னை டூ திருச்சி இடையிலான 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்க வில்லை. இதற்கான டிபிஆர தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்பட உள்ளதாம். அதோடு சேர்த்து இந்த பணிகள் மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளன.
சென்னை திருச்சி இடையிலான பயணத்தை 5-6 மணி நேரத்தில் இருந்து 2.30-3 மணி நேரமாக குறைக்கும். அதிகபட்சம் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். இதில்தன மதுரை கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மொத்தமாக தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவிலில் துவங்கி, மதுரை வரை விரைவுச்சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 470 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சாலை வந்தால் சென்னை டூ மதுரை 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தாம்பரத்தில் இருந்து திருச்சி அல்லது தாம்பரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில் இருந்து கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதை சரிக்கட்ட இந்த சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பெரிய அளவில் எக்ஸ்பிரஸ்வே இல்லை என்று புகார்கள் வைக்கப்படும் நிலையில் புதிய எக்ஸ்பிரஸ்வே தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுரை - சென்னை இடையே புதிய எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications