Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கக் காசு 1 பவுன் தந்தும்.. தமிழகத்துக்கு ரஜினிகாந்த் செய்தது என்ன? பண்ணை வீடும், பகட்டு வாழ்வும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு தமிழக மக்கள் இந்த அளவுக்கு புகழை கொடுத்தும், சமூக அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் குரல் கொடுக்கவில்லையே? நம் மக்கள் துயரத்தில் இருக்கும்போது ரஜினி தலையிடுவதே இல்லையே? தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் உதவியிருக்கிறாரா ரஜினிகாந்த்? என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பேட்டி ஒன்றில் காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்தள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது எதுக்கு? மக்கள் நலனுக்காக அவர் எந்த பங்களிப்பையும் செய்யவில்லையே.

Cinema Rajinikanth Gold Coin

ரூ.500 கோடி மார்க்கெட்

ஒரு படத்துக்கு 500 கோடி ரூபாய் ரஜினிக்கு மார்க்கெட் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், லைட்பாய், வாகனம் ஓட்டுபவர்கள், சாப்பாடு போடுபவர்கள், உதிரி பாகங்களை சுமப்பவர்கள் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளன.

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் எத்தனை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது? கொரோனா காலத்தில் எத்தனை ஏழை, எளிய மக்களுக்கு திருமணம் மண்டபம் திறந்து விடப்பட்டது?

சூர்யா குடும்பம் 'ஆகாரம் அறக்கட்டளை' வைத்து ஏழைக் குழந்தைகளை படிக்க வைப்பதைப் போல, ரஜினிகாந்த் பெயரில் ஏதாவது ஒரு இலவச பள்ளிக்கூடம் இருக்கா? அறக்கட்டளை இருக்கா?

ஊருக்கே உதவிய எம்ஜிஆர்

ராமாவரம் தோட்டம் சுடுகாடாக கிடக்கிறது.. லைட் போடக்கூட அங்கே ஆள் இல்லை.. எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளி, கண் தெரியாதோர் பள்ளி, ஊனமுற்றோர் பள்ளி என எத்தனை பள்ளிக்கூடங்களை சென்னை முழுவதும் கட்டி வைத்துள்ளார்.. ஆனால், ரஜினி பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை காட்டுங்கள் பார்க்கலாம்.

ஒரு பவுன் தங்கக்காசு

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு.. அதாவது ஒரு சொட்டு வியர்வைக்கு 1 லட்சம் தரும் இந்த மக்களுக்கு, ரஜினி என்ன செய்தார்? சுனாமி, புயல், கொரோனா என எத்தனையோ நடந்து..

கலைஞனுக்கு மக்கள் கோடி கோடியாக கொட்டி தரும்போது, அவர்களை கருணையுடன் பார்க்ககூடாதா? கேளம்பாக்கத்தில் பண்ணை வீடு கட்டியதுதான் மிச்சம்.. கோடிக்கணக்கான பணத்தில் ஸ்டீல்ஃபேக்டரியும் கிளாஸ்ஃபேக்டரியும், கேளம்பாக்கத்துல பண்ணை வீடுகளும் கட்டுவதுதான் சாதனையா?

தமிழ் மக்கள் இவருக்கு இவ்வளவு புகழைக் கொடுத்தும், சமூக அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் குரல் கொடுக்கவில்லையே.. மக்கள் துயரத்தில் இருக்கும்போது ரஜினி தலையிடுவதே இல்லையே..

5 நட்சத்திர ஓட்டல்வாசிகள்

ரஜினி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் வெறும் 5 நட்சத்திர ஓட்டல்வாசிகளாக இருக்கிறார்களே தவிர, அடித்தட்டு மக்கள் சினிமா பார்க்கும் துயரங்களை புரிந்துகொள்வதில்லையே..

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.. டான்ஸ் ஆடினார்.. ராமர் கோயில் கட்டினாலும் சரி, அம்பானி வீட்டு திருமணம் நடந்தாலும் சரி, ரஜினியை முன்னணியில் உட்கார வைத்துவிடுகிறார்கள். அம்பானி வீட்டுத் திருமணத்தில் ரஜினிக்கு 15 லட்சம் ரூபாய் வாட்ச் பரிசளிக்கப்பட்டதாக சொன்னார்கள்..

அம்பானியை பார்க்கிறாரே தவிர, மறுபுறம் தெருவில் படுத்துக்கிடக்கும் ஏழைகளை பார்க்க மறுக்கிறார்.. இரட்டை நிலை சரியில்லை என்றுதான் சொல்கிறேன்" என்றெல்லாம் பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+