சம்பளத்தில் ஜாக்பாட் அடித்த பிரதீப் ரங்கநாதன்.. ரூ.100 கோடி கிங்.. மொத்த படமும் கமர்ஷியல் ஹிட் வேற
சென்னை: தமிழ் திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகராக அசுர வளர்ச்சி அடைந்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தடம் பதித்த இவர், முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார். இப்போது இவரது சம்பளம்தான் கோடம்பாக்கத்தில் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது..
பிரதீப் ரங்கநாதனின், முதல் படம் கோமாளி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதனின் சினிமா பயணம் முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்தது.

பிரதீப் ரங்கநாதன்
டைரக்டராக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'லவ் டுடே' படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். இந்தப் படத்தை அவரே எழுதி இயக்கி நடித்தது குறிப்பிடத்தக்கது.
'லவ் டுடே' படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்தது. இந்த வெற்றிக்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' மற்றும் 'டியூட்' ஆகிய படங்களும் தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தன. இதன்மூலம், தான் நடித்த முதல் மூன்று படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற அபூர்வ சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார்.
சம்பளம் - அசுர வளர்ச்சி
இவருடைய இந்த அதிரடி வளர்ச்சி, லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி போன்ற டாப் இயக்குநர்களின் ஆரம்ப கால வளர்ச்சியை நினைவூட்டும் வகையில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய தொடர் வெற்றியால், அவரது சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ரவி மோகனை வைத்து கோமாளி படம் இயக்கியபோது அவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் பிறகு, லவ் டுடே படத்தில் நடித்து இயக்கியபோது, ஹீரோவாக 80 லட்சம் ரூபாயும், இயக்குநராக 70 லட்சம் ரூபாயும் என மொத்தமாக சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றிருக்கிறார்..
இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, டிராகன் படத்தில் ஹீரோவாக நடிக்க மட்டுமே அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த டியூட் படத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். இப்போது, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தாண்டி, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் இவரை ஒப்பந்தம் செய்ய பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க காத்திருக்கிறார்களாம்..
முன்னணி ஹீரோ - செம திறமை
தற்போதைய சூழலில், முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 7 ஆண்டுகளில் 50 லட்சம் முதல் 25 கோடி என்கிற அளவுக்கு தனது உழைப்பாலும், கதைத் தேர்வினாலும் அவர் உயர்ந்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்ததாக 'எல்ஐகே' படம் வரப்போகிறது.. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.. திறமை எங்கிருந்தாலும் அதுக்கு தனி மதிப்புதான்...!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications