வந்தாச்சு ஐடி ரிட்டர்ன்.. உங்க அக்கவுண்டிற்கு ரூ.15 ஆயிரம் வரும்.. தீயாக பரவும் மெசேஜ்! உண்மை என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வரி செலுத்தியவர்களுக்கு இன்கம் டேக்ஸ் ரீபண்ட் பெறுவது குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரியைச் செலுத்த வேண்டும். இதற்கு அவர்கள் வருமான வரி இணையதளத்திற்குச் சென்று வருமான வரியைக் கட்ட வேண்டும்.

 FACT CHECK Fake news has been spreading about Income tax refund of Rs 15,490 for taxpayers

அதன்படி இந்தாண்டும் ஜூலை 31ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் நீட்டிப்படவில்லை.

மெசேஜ்: எனவே, வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாக இருந்தது. இப்போது யாராவது வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அபராதத் தொகையுடன் தான் 2023 நிதியாண்டிற்கான ITR எனப்படும் வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும்.

இதற்கிடையே இப்போது பலருக்கும் நீங்கள் கூடுதலாக வருமான வரி செலுத்திவிட்டீர்கள் என்றும் நீங்கள் செலுத்திய கூடுதல் வரி திரும்பத் தருகிறோம் என்றும் மெசேஜ் வருகிறது. இதற்கு உண்மையில் என்ன அர்த்தம். Income tax refund இப்போதே அளிக்கப்படுகிறதா என்பதை பார்க்கலாம்.

வரி ரிட்டர்ன்: கடந்த சில நாட்களாகவே இணையத்தில் ஒரு மெசேஜ் சுற்றி வருகிறது. அதாவது வரி செலுத்துவோருக்கு கூடுதலாகச் செலுத்தப்பட்ட ரூ.15,490 வருமான வரி திரும்ப அளிக்கப்படுவதாக மெசேஜ் செல்கிறது. அதில், "உங்களுக்கான ரூ.15,490 tax refundக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,.

மேலும் அந்தத் தொகை உங்கள் வங்கி எண் 5xxxxx6755க்கு அனுப்பப்படும். உங்கள் வங்கி அகவுண்ட் எண் இது இல்லை என்றால்.. உடனடியாக இந்த லிங்கை பயன்படுத்திச் சரியான அக்கவுண்ட நம்பரை அப்டேட் செய்யவும்" என்று அதில் இருக்கிறது.

உண்மை என்ன: இதை உண்மை என்று நம்பி சிலர், அந்த லிங்குகளையும் க்ளிக் செய்கிறார்கள். இருப்பினும், இது உண்மை இல்லையாம். மோசடி பேர்வழிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை வைத்து பணத்தை ஏமாற்ற முயல்வார்கள். இப்போது வருமான வரி சீசன் என்பதால் இதை வைத்து அவர்கள் இப்போது மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக PIB ஃபேக்ட் செக்கும் தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும் வரி செலுத்துவோர் இந்த போலியான வருமான வரி ரீஃபண்ட் மோசடிகளுக்கு ஏமாற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், வங்கிக் கணக்கு போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்: அரசு விதிகளின்படி, ஐடி ரிட்டர்ன் என்பது முழுமையாக பிராசஸ் செய்யப்பட்ட பிறகே கொடுக்கப்படும். இதற்கு சில மாதங்கள் வரை ஆகலாம். எனவே, இதுபோன்ற மோசடி லிங்குகளை க்ளிக் செய்து ஏமாற வேண்டாம். அதேபோல இதில் ஏதாவது attachments இருந்தால் அதையும் நிச்சயமாக க்ளிக் செய்யக் கூடாது.

பொதுமக்கள் இதுபோன்ற போலியான மெசேஜ்கள் வந்தால் அதனை [email protected] அல்லது [email protected] என்ற மெயிலுக்கு அனுப்புமாறும் வருமான வரித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

வருமான வரி செலுத்துவோருக்கு ஐடி ரிட்டர்னாக ரூ. 15,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக ஐடி துறை மெசேஜ்

முடிவு

வருமான வரித்துறை சார்பில் இதுபோன்ற மெசேஜை அனுப்பவில்லை என விளக்கமளித்துள்ளது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+