பொதுமக்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க உள்ளதா? பரவும் தகவல் உண்மையா?
டெல்லி: பொதுமக்களின் அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க இருப்பதாகவும் இதற்காக புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் சில நிமிடங்களில் மூலை முடுக்கெல்லாம் சோஷியல் மீடியா மூலமாக பரவி விடுகிறது. செய்திகள், அரசின் திட்டங்கள் எதுவென்றாலும் மக்களுக்கு உடனடியாக கிடைத்து விடுகிறது என்றாலும் கூடவே பொய்யான தகவல்களும் வதந்திகளும் பரவி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் உண்மை செய்தியை விட வதந்திகள் மிக வேகமாக பரவுகிறது. இதனால் மக்களுக்கு தேவையற்ற குழப்பங்களும் அச்சமும் ஏற்படுகிறது.

அந்த வகையில், தான் வாட்ஸ் அப்பில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, பொதுமக்களின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க இருப்பதாகவும் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் வாட்ஸ் அப் டிரிபிள் டிக் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த செய்தி வாட்ஸ் அப் பார்வேடு மெசேஜ்களில் வேகமாக பரவியது. இதனால் மக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான், மத்திய அரசின் பிஐபி டிவிட்டர் பக்கதில் இது குறித்த உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஐபி பேக்ட் செக் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "மத்திய அரசு இதுபோன்ற எந்த ஒரு விதியையும் அமல்படுத்தவில்லை. அரசு அதிகாரிகள் வட்டாரங்களும் பல்வேறு செய்திகளும் இதை உறுதி படுத்தியுள்ளன.
தனிநபர்களின் செல்போன் அழைப்புகளையும் சமூக வலைத்தள செயல்பாடுகளையும் அரசு கண்காணிக்கும் என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பில் பரவும் இத்தகைய முற்றிலும் தவறானது என்பது தெரியவந்துள்ளது. ஆகவே, இதுபோன்ற மெசேஜ்களுடன் வரும் தகவலை யாருக்கும் ஷேர் செய்யாமல் இருப்பதை தவிர்ப்பதால் தேவையற்ற அச்சத்தை தவிர்க்க முடியும்.

Fact Check
வெளியான செய்தி
பொதுமக்களின் சமூகவலைத்தள செயல்பாடுகளை அரசு கண்காணிக்க இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் தகவல்கள் பரவின.
முடிவு
இது போன்ற எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. பொதுமக்களின் தனிப்பட்ட அழைப்புகளையும் சமூக வலைத்தள செயல்பாடுகளையும் கண்காணிக்க இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது ஆகும்.
ரேட்டிங்
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications