இந்தியா பாகிஸ்தான் போர்.. உங்க வீட்டில் இருக்கும் சின்ன சின்ன தங்க நகைகள் கூட முக்கியம்.. ஜாக்பாட்
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடப்பதற்கு இடையில் உங்கள் வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் உங்களுக்கு பெரிய அளவில் உதவ போகிறது. அது எப்படி என்று பார்க்கலாம்,
இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் மூண்டு உள்ளது. வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
தங்கம் பாதிக்கும்
தங்கம் விலை உயருமா மாறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. பொதுவாக எந்த நாடாக இருந்தாலும் அந்த நாடு போரில் நேரடியாக ஈடுபட்டால் அவர்களின் பண மதிப்பு குறையும். அவர்கள் ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதால் டாலர் கையிருப்பு குறையும்.
இதனால் பண மதிப்பு கண்டிப்பாக சரியும். பண மதிப்பு சரிந்தால் தங்கம் விலை புதிய உயரத்தை அடையும். இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டால் இரண்டு நாடுகளின் பண மதிப்பும் சரியும். இதனால் டாலர் கையிருப்பும் குறையும். ஏனென்றால் இரண்டு நாடுகளுமே மேற்கு உலக நாடுகளிடம் இருந்துதான் ஆயுதங்களை வாங்குகின்றன. போர் வந்தால் இரண்டு நாட்டு வர்த்தகம் சரியும். பங்குச்சந்தை சரியும், பண மதிப்பு சரியும். இதனால் கண்டிப்பாக இரண்டு நாடுகளிலும் தங்கம் மதிப்பு உயரும்.
தங்கம் முக்கியம்
1. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கம் தொடங்கி பெரிய தங்கம் வரை அனைத்தின் மதிப்பும் வேகமாக உயரும்.
2. SIP தொடங்கி தினசரி trading வரை எந்த ஒரு முதலீட்டிலும் வர முடியாத அளவிற்கு இதில் உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே வருவாய் வரும்.
3. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 30% அதிகரித்து உள்ளது. இந்த அளவிற்கு ரிட்டர்ன் கொடுக்க கூடிய முதலீடு எதுவும் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும்.
4. உங்கள் வீட்டில் உள்ள சின்ன தங்கம் கூட.. உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பு. தேவையான நேரங்களில் இதை அடகு வைத்து liquid cash ஆக மாற்றிக்கொள்ள முடியும். பின்னர் மீட்டுக்கொள்ள முடியும்.
5. பொதுவாக உலகம் முழுக்க நிலவும் பொருளாதார பிரச்சனை காரணமாக பணத்தின் மதிப்பு குறையும். அதாவது பணம் என்பது பேப்பர்தான். பணவீக்கம் காரணமாக இன்று நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளின் விலை அடுத்த சில மாதங்களில் 200 ரூபாய்க்குத்தான் கிடைக்கும். இந்தியா பாகிஸ்தான் போர் சமயத்தில் அது மேலும் சரியும்.
6. இதன் அர்த்தம் உங்கள் பண மதிப்பு சரியும். அதுவே பணத்தை சேமிப்பதற்கு பதிலாக தங்கத்தை சேமித்தால்.. தங்கம் அதே நேரத்தில் மதிப்பு உயரும்.
7. போர் வரும் போதெல்லாம் பொருளாதார சரிவு ஏற்பட்டு பணம் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கத்தின் மதிப்பு உயர்வது வழக்கம். எனவே உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்.












Click it and Unblock the Notifications