24K, 22K,18K.. அட்சய திரிதியை நாளில் எந்த வகையான தங்கம் வாங்குவது சிறந்தது? எது ஸ்மார்ட் முடிவு?
சென்னை: அக்தி அல்லது அகா தீஜ் என்றும் பல்வேறு மொழிகளில் அழைக்கப்படும் அட்சய திரிதியா, ஆண்டுதோறும் ஜெயின் மற்றும் இந்து மதத்தில் வசந்த காலத்தை கொண்டாடும் விழாவாகும். இது பொதுவாக மே மாதத்தின் முதல் வாரத்தில் வரும். இந்த முறை 2025 ஆண்டு அட்சய திருதியை திருநாள் ஏப்ரல் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது
அட்சய திருதியை போன்ற சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகைகளில் தங்கம் வாங்குவது முக்கியமானதாக, மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள இந்துக்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் மூலம் அட்சய திரிதியை ஒரு புனித நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவது மட்டுமன்றி இந்த நாளுக்கு என்று பல சிறப்புகள் உள்ளன. இந்த நாளில் நீங்கள் தங்கம் வாங்கும் பட்சத்தில் எந்த வகையான தங்கம் வாங்கலாம் என்ற விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

எந்த தங்கம் வாங்குவது பெஸ்ட்?
இதில் 22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக நீங்கள் தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
நீங்கள் வீட்டில் தங்கத்தை ஒரு வரம்பு வரை சேமித்து வைத்தால், யாரும் உங்கள் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவே உங்கள் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் - திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள்- திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான பெண்கள்- திருமணமான பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும். திருமணமான ஆண்கள் - அதேசமயம் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
அதுவே பெண்கள் 500 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் ஆண்கள் 250 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் வீட்டில் இந்த குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
காரட் தங்கம்
காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.
24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.
விலை நிலவரம் என்ன?
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,797 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,980 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,435 ஆகவும் உள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹111 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,11,000 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலைக்கு இணையாக வெள்ளியின் விலை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பலரும் தங்கத்தோடு சேர்த்து வெள்ளியும் வாங்கி வருகிறார்கள். ஆனால் வெள்ளி வாங்கிய பலருக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
வருகிறது புதிய தங்கம்
தங்கத்தின் விலை 2024ல் 25% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2024ல் தங்கத்தின் விலை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். அதேபோல் இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2கே கிட்ஸ் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால்.. அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. இதையடுத்தே 9 கேரட் தங்கத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தங்க நகை வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் உட்பட அனைத்து முக்கிய அமைப்புகளுடன் நடந்த இறுதிச் சுற்று ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு சில மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இனி தங்கம் வாங்கும் போது 9 KT தங்கப் பொருட்களுக்கு உடனடி தூய்மைச் சான்றிதழ் வழங்கப்படும். ஆகஸ்ட் 2024 இல் 22 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹68,000 ஆகவும், 9 KT தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹25,000 முதல் ₹30,000 ஆகவும் இருந்தது. ஒப்பீட்டளவில் 9 கேரட் விலை குறைவாக இருக்கும்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தங்க பத்திர திட்டம்: 8 வருஷம் காத்திருந்தால் முழு வரி விலக்கு.. தங்கம் வாங்குபவர்களுக்கு டபுள் லாபம் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications