அடுத்த வாரம்தான் ரொம்ப முக்கியமான வாரம்.. தங்கம் விலையில் நடக்க போகும் மாற்றம்! இப்பவே சுதாரியுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலையில் அடுத்த 1 வாரத்திற்கு தரமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. நிதி ஆண்டின் வருட கடைசி என்பதால் தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. ஏப்ரல் 2ம் தேதி வர்த்தக போர் உச்சம் அடைய உள்ளது. இந்தியா வரியை குறைக்க போவதாக தகவல்கள் வருகின்றன.. அப்படியே இந்தியா வரியை குறைத்தாலும்.. நாங்கள் இந்தியா மீது கண்டிப்பாக வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீதான கட்டணங்களை இந்தியர்கள் கணிசமாகக் குறைக்கப் போகிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதி, அவர்கள் எங்களிடம் இப்போது வசூலிக்கும் அதே கட்டணத்தை நாங்கள் அவர்களிடம் வசூலிப்போம்.. அவர்கள் குறைத்தாலும் குறைக்கவிட்டாலும் நாங்கள் இந்தியாவை விட மாட்டோம்.. அவர்கள் வசூலிக்கும் கட்டணம் அளவிற்கு உயர்த்துவோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம்.

2. இதனால் அதற்கு பின் தங்கம்தான் ஒரே பாதுகாப்பு என்பதால் பலரும் தங்கத்தை நோக்கி ஓடுவார்கள். இதனால் தங்கம் விலை ஏப்ரலில் இருந்து கடுமையாக உயரும்.

Why is next week so crucial in the Gold rate What you should do

3. அதற்கு முன் இப்போது தங்கத்தில் கரெக்சன் நடக்கும். அதாவது விலை சமயங்களில் மிக அதிகமாக உயர்ந்துவிட்டால் கொஞ்சம் விலை குறைந்து.. சமநிலையை அடையும். அந்த வகையில் இந்த வாரம் சிறிய கரெக்சனை எதிர்பார்க்கலாம் என்று உலக பொருளாதார வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

4. இதன் அர்த்தம் தங்கத்தின் விலை எதிர்பார்க்காத அளவிற்கு மோசமான நிலைக்கு குறையாது. மாறாக லேசாக குறையும். ஆனால் மீண்டும் உயரலாம்.

5. கடந்த வாரம் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,005.09 என்ற சாதனையை எட்டியது. அங்கே தங்கம், இந்த ஆண்டு இதுவரை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது இந்த வாரமும் அப்படியே இருக்கும். அதாவது 3 ஆயிரம் டாலருக்கு கீழ் போகும் .. அப்படியே போனாலும் மீண்டும் 3 ஆயிரம் டாலரை தாண்டும்.

6. தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

7. இந்த வாரம் ஏன் முக்கியமான வாரம் என்றால்.. இது நிதி ஆண்டின் வருட கடைசி. இதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும். விலை குறைந்தால்.. அதை பற்றி கவலைப்பட வேண்டாம். சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹8,978 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,230 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹6,795 ஆகவும் உள்ளது. இதில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+