கடகடன்னு பல் ஆடுதா.. பார்வை மங்கலா தெரியுதா? இந்த பூக்களே போதும்.. வியக்க வைக்கும் வெங்காய பூக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்காயம் மட்டுமல்ல, வெங்காய தாள்கள் மட்டுமல்ல, வெங்காய பூக்களும் நமக்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை தருகிறது.

வெங்காய தாள்களில் வைட்டமின் K, C, A, B1, B2, B3, B5, B6, B9, கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, பீட்டா கரோடீன் சத்துக்கள் அடங்கியிருப்பதால்தான், சத்தான உணவாக திகழ்கிறது.

Amazing Medicinal Uses of Onion Flowers and Can we use onion flowers as medicine for toothache

நார்ச்சத்துக்கள்: நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானம் சீராகிறது.. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. நார்ச்சத்து நிறைந்த வெங்காய தாள்களில் உள்ள புரதம், கொழுப்புச்சத்தினை குறைக்கிறது.. வெங்காயத்தாளில் சல்பர் சத்துக்கள் நிறைய உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது..

வைட்டமின் A சத்து என்பதால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்கிறது. வைட்டமின் K உள்ளதால், எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களை உருவாக்கும் நொதிகளின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகிறது..

எதிர்ப்பு சக்தி: இதுபோலவே வெங்காய பூக்களும் நமக்கு பலவகைகளில் உதவுன்றன.. வெங்காயம், வெங்காய தாள்களை போலவே, இந்த வெங்காயத்தாளிலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.. வைட்டமின் C உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. வெங்காயத்திலிருந்து சாறு எடுத்து, வெங்காயப்பூக்களுடன் இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட காசநோயும் குணமாகிவிடுமாம்..

குளிர்ச்சி மிகுந்தது இந்த வெங்காய பூக்கள்... எனவே, உடல் சூடு, எரிச்சல், போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக இப்பூக்கள் உதவுகின்றன.. அவ்வளவு ஏன்? வெங்காயத்தையும், வெங்காயப்பூக்களையும் பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட்டு வந்தால் மூலம் தொடர்புடைய தொந்தரவுகள் உடனடியாக குறையுமாம்.

நச்சுக்கள்: அதேபோல, கடுமையாக வயிறு வலி இருந்தால், ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூக்களை, சுத்தம் செய்து, பாத்திரத்தில் போட்டு, அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். இது நன்றாக வெந்ததுமே, இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுவலி பறந்துவிடுமாம். அதேபோல, குடலில் தேங்கிக்கிடக்கும் வாயு, நச்சுக்களை இந்த பூக்கள் அகற்றுகின்றன.

பற்கள், கண்கள் பலம்பெறவும் இந்த பூக்கள் உதவுகின்றன.. பல் வலியால் தொந்தரவு இருந்தால், வெங்காயம், வெங்காயப்பூக்கள் இரண்டிலுமே சம அளவுக்கு சாறு எடுத்து, வாய் கொப்பளித்து வந்தால் போதும்.. இதனால், பலவீனமான பற்களும் வலுவடையும்.. ஈறுகள் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகுமாம்.

பார்வை கோளாறு: பார்வை கோளாறு, அல்லது பார்வை மங்கலாக இருப்பவர்கள், வெங்காயப்பூவை கசக்கி, அதிலிருந்து 2 சொட்டு, காலை, மாலை என 3 நாட்களுக்கு கண்களில் விட்டு வந்தால் மங்கலான பார்வை சரியாகும்.. இத்தனை மருத்துவ சக்தி வாய்ந்த வெங்காய பூக்களை சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்வது ஆரோக்கியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+