Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்டுப்போன ஆட்டுக்கறிக்கு இதுதான் காரணமா? மட்டனில் இதை கவனிச்சீங்களா? ஆட்டுக்கறியில் அலர்ட் மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பறிமுதல் செய்து வருகிறார்கள். எனினும், ஆட்டுக்கறியை இறைச்சி கடைகளில் எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி பாதுகாப்புடன் வைத்திருந்து, பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி உள்ளனர்.

எப்போது ஆட்டுக்கறி வாங்கினாலும், உடலில் ரத்தம் துளிகூட தங்காமல் இருக்கும் ஆடுகளையே பார்த்து வாங்க வேண்டும். ஆடுகள் நோய் தாக்கப்பட்டிருந்தலோ அல்லது வேறு ஏதாவது உடலில் பாதிப்பு இருந்தாலோ வெட்ட அந்த ஆட்டின் உடலில் ரத்தம் ஆங்காங்கே தேங்கியிருக்கும்.

mutton meat

மட்டன்: மட்டன் தோலில் நிறைய கலோரி உள்ளதால், இதை தவிர்த்து வாங்கலாம். ஆடுகளை வெட்டி, 5 மணி நேரத்திற்குள் வாங்கிவிட வேண்டுமாம். நேரம் ஆக ஆக, இறந்துபோன ஆடுகளில் கிருமிகள் வந்து சேர்ந்துவிடும். ஆட்டுக்கறியை விரல்களால் தொட்டு அழுத்தி பார்க்க வேண்டும். பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே கறி வந்தால், நல்லது. கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்காமல் தவிர்க்கலாம்.

ஆடுகளை அறுத்து நீண்ட நேரம் தொங்கவிடும்போதுதான், அதன் தசைப்பகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகிவிடுகிறது.. மட்டனை வாங்கி வந்ததுமே காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணிநேரம் வெளியே வைத்திருந்துவிட்டு, அதற்கு பிறகே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

மீன் மார்க்கெட்: இந்த அளவுக்கு பார்த்து பார்த்து வாங்கினாலும், சமீபகாலமாகவே ஓட்டல்களிலும், மீன் மார்க்கெட், மட்டன் கடைகளிலும், சுகாதாரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.. அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கையை எடுத்தாலும், பொதுமக்களும் விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது.

நாம் சாப்பிடும் அசைவ உணவு, 100 சதவீதம் சுத்தமானதாகவோ, பாதுகாப்பானதாகவோ இல்லை என்று சொல்கிறார் சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியின் இறைச்சி அறிவியல் துறை தலைவர் ஆர்.நரேந்திரபாபு.

அமிலத்தன்மை: ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இவர் சொல்லும்போது, "பொதுவாக இறைச்சியில் 6.5 அளவுக்கு அமிலத்தன்மை இருக்கும். அது வெட்டப்பட்டு, மைனஸ் 18 டிகிரியில், 24 மணி நேரத்திற்கு மேலாக உறைநிலைப்படுத்தப்படும் போது, அமிலத்தன்மை இல்லாமல் போய் விடும். ஆனால், நாம் வெட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே இறைச்சியை சமைத்து சாப்பிடுவதால், அமிலத்தன்மை நிறைந்த இறைச்சியையே சாப்பிடுகிறோம்.

இறைச்சியில் அமிலத்தன்மை 6க்குள் இருக்கும்போது நமக்கு பெரிதாக பாதிப்பில்லை. ஆனால், வெட்டப்பட்ட இறைச்சியை உறைநிலைப்படுத்தாமல், பல மணி நேரம் வெளியில் வைத்திருந்து, சமைத்து சாப்பிடும்போதுதான் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதுதான் செரிமான பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றுக்கு காரணமாகிவிடுகின்றன. எனவே, வெட்டப்பட்ட இறைச்சியை சாதாரண வெப்பநிலையில், 4 மணி நேரம் வரை வைத்திருந்தால், அதில் பெரிய அளவில் நுண்ணுயிர் பெருக்கம் அதிகரிக்காது.

ஃபிரிட்ஜ்: இறைச்சியை, 0 முதல் 5 டிகிரி குளிர் நிலையில் வைத்திருந்தால், 24 மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். மைனஸ் 18 டிகிரி உறைநிலையில் வைத்திருக்கும் இறைச்சியை, 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனாலும், இறைச்சி வைத்திருக்கும் ஃபிரிட்ஜை அடிக்கடி திறந்து மூடும்போது, உறைநிலையில் மாற்றம் ஏற்பட்டு, இறைச்சி பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இறைச்சியை ஒரே நேரத்தில் முழுமையாக வெட்டாமல், சிறிது சிறிதாக வெட்டும்போது, 4 மணி நேரத்திற்கு பிறகு, ஈஸ்ட் மற்றும் மோல்ட், ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ், கேம்பிலோபாக்டர், சால்மோலெலா, ஈகோலி போன்ற நுண்ணுயிர்களின் பெருக்கம் அதில் அதிகரித்துவிடும்.. இதை தவிர்க்க வேண்டுமானால், அனைத்து கடைகளிலும் ஃபிரிட்ஜ் ஏற்படுத்த வேண்டும். இறைச்சியில் 70 சதவீதம் தண்ணீர் தான் இருக்கும். கடைகளில், ஏசி இருந்தால், இறைச்சி நீர் வற்றாமல் இருக்கும். வியாபாரிகளுக்கு எடையும் குறையாது.

இறைச்சி தரம்: நுண்ணுயிர்கள் பாதித்த இறைச்சிகளை, 72 டிகிரி வெப்பநிலையில் வேகவைக்கும் போது, அவை உயிரிழந்தாலும், அதன் மீதான தாக்கத்தால், வாந்தி, பேதி, குடல் பாதிப்பு ஏற்படும். சுகாதாரமற்ற இறைச்சிகள் என உணவு பாதுகாப்பு துறை கண்டறிந்தால், பிடிபடும் நிலையிலேயே பதப்படுத்தி, பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான், இறைச்சியின் தரம் குறித்து சரியான முடிவுகளை அறிய முடியும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+