கறிவேப்பிலை கருங்கூந்தலுக்கு.. கைப்பிடி வேப்பிலை போதுமே.. தலைமுடி அடர்த்தியாக வளர சூப்பர் எண்ணெய்
சென்னை: தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஒருசில எண்ணெய் வகைகளை பார்க்கலாம்.. இந்த எண்ணெய், கடைகளிலும் கிடைக்கும்.. நாமும் எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
முருங்கையிலை, கறிவேப்பிலை.. இந்த 2 இலைகளுமே நமக்கு தரும் மருத்துவ நன்மைகளை பட்டியலிட்டு சொல்ல முடியாது.. கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, இந்த இரண்டையுமே எப்படி சாப்பிட்டாலும் அது நன்மையையே தரும். இரண்டிலுமே இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. எனவே இவைகளை பயன்படுத்தி எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்க்கும்போது, முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

தலைமுடி வளர்ச்சி: முருங்கைக்காயில் உள்ள விதைகளை பயன்படுத்தியும் எண்ணெய் தயாரிக்கலாம். முருங்கைக்காயில் உள்ள விதைகளை மட்டும் வெளியே எடுத்து, வாணலியில் கொட்டி வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வறுத்த விதைகளை அதில் கொட்டி கொதிக்கவிட வேண்டும்.
அப்போது விதைகளிலிருந்து எண்ணெய் வெளியேற துவங்கும்போது, அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் பிரிந்து வரவர, அவைகளை தனியாக சேமித்து கொள்ள வேண்டும். பிறகு மொத்த எண்ணெய்யையும், அப்படியே பாத்திரத்தில் 3 நாளைக்கு விட்டுவிட வேண்டும். பிறகு எண்ணெய் மட்டுமே அடியில் தங்கியிருக்கும். இந்த எண்ணெய்யையுடன், பாதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும்.
முருங்கை விதை: வெறும் முருங்கை எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் இன்னும் நன்மை கிடைக்கும். தலைமுடி உதிர்தல், பலமில்லாத கூந்தல், தலைமுடி வறட்சி போன்ற அத்தனை கேச கோளாறுகளையும் இந்த எண்ணெய் நீக்குகிறது. அதனால், வாரம் 2 முறை, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வரலாம்..
அதேபோல, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமின்றி விழுதாக அரைத்து எடுக்க வேண்டும். ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில், இந்த விழுதை கொட்டி, சிறிது வெந்தய பொடியையும், அதில் சேர்த்து கருகாமல் கொதிக்கவிட வேண்டும், இந்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்தி வரலாம்.
ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய்யும் முடி வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.. காரணம், தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் இந்த எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனால், முடி சேதமடைவதையும் தடுக்கிறது... தலைமுடிக்கு பொலிவையும் தருகிறது.. ஆலிவ் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதற்கு முன்பு தலைமுடிக்கு பயன்படுத்தினால் சில மாதங்களில் பலன் கிடைக்கும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரை ஊற்றி, ஒரு கைப்பிடி கருப்பு சீரகத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரை இந்த தண்ணீரை வடிகட்டி, அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வந்தால், உஷ்ணம் நீங்கி, தலைமுடி உதிர்வது கட்டுப்படும். தலைமுடியும் அடர்த்தியாக வளரும்.
சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயத்துடன், கறிவேப்பிலைகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.. இதனை குட்டி குட்டி உருண்டைகளாக்கி நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும்.. இதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாக கலந்து , தலைக்கு தடவி வர தலைமுடி அடர்த்தியாக வளரும்.












Click it and Unblock the Notifications