Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்பக புற்றுநோய்.. அச்சம் வேண்டாம்.. பெண்களுக்கு நம்பிக்கை தரும் டாக்டர். வேத பத்மப்பிரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 10 ஆண்டுகளில் மார்பக புற்றுநோய் இரட்டிப்பாகியுள்ளது. 25 முதல் 40 ஆண்டுகள் வயதுள்ள பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகரித்து வரும் போக்கு அறியப்பட்டிருக்கிறது என்று எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மார்பக புற்றுநோய் நிபுணர் டாக்டர். வேத பத்மப்பிரியா கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம்: கடந்த 90 ஆண்டுகளாக ஒவ்வொரு அக்டோபர் மாதமும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்றுக்கொண்டு, தற்போது உலகளவில் பொதுவாகக் கண்டறியப்பட்ட புற்றுநோயான மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான தடுப்பு மற்றும் வழக்கமான பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிங்க் நிற ரிப்பனைக் காட்டுவதால் இது "பிங்க் அக்டோபர்" என்று அழைக்கப்படுகிறது .

Breast Cancer Awareness Month 2023: Women from the age group 40 Years have witnessed the rising trend of Breast Cancer

மார்பக புற்றுநோய் சவால்: ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரையும் பாதிக்கும் ஒரு உலகளாவிய உடல்நல சவாலாக மார்பக புற்றுநோய் இருக்கிறது என்றபோதிலும், உலகெங்கிலும் மிக அதிகமாக காணப்படுகின்ற, உயிருக்கு ஆபத்தான நோய்களுள் ஒன்றாக இது தனிக்கவனம் பெறுகிறது. சென்னையில், மார்பக புற்றுநோய் பாதிப்பு நேர்வுகள் உயர்ந்திருப்பது உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய கவலைதரும் பிரச்சனையாக தற்போது உருவெடுத்திருக்கிறது. இதுகுறித்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், அதுவும் குறிப்பாக சென்னை மாநகரில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட புதிய நேர்வுகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்படுகின்றன.

சென்னையில் பாதிப்பு அதிகம்: சென்னையில் மட்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகள் காலஅளவில் உச்சத்தை தொட்டிருக்கின்றன. ஒரு இலட்சம் நபர்களுள், 27 என்பதிலிருந்து ஒரு இலட்சம் நபர்களில் 52 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது 40 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் மத்தியில் இப்பாதிப்புகள் அதிகரித்திருப்பது இன்னும் அதிக கவலையளிப்பதாக இருக்கிறது.

பெண்கள் பாதிப்பு: ஒரு இலட்சம் பெண்களுள் 50% நபர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது மிகவும் அச்சுறுத்துகின்ற, கவலையளிக்கின்ற புள்ளிவிவரங்களுள் ஒன்றாகும். கூடுதலாக, அதிக உயிரிழப்பு விகிதம் கொண்ட நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது. மார்பக புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு இரண்டு பெண்களில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதே பயனளிக்கும் திறன்மிக்க சிகிச்சைக்கான வழிமுறை என்பதை இது அழுத்தம் திருத்தமாக நினைவூட்டுகிறது.

நவீன மருத்துவ வசதிகள்: மார்பக புற்றுநோயை முற்றிய இறுதி நிலையில் அடையாளம் காண்பது, அதுவும் இந்தியாவில் குறிப்பாக நிலை 2, நிலை 3 மற்றும் நிலை 4 நகரங்களில் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாக இருக்கிறது. வளர்ந்து முற்றிய நிலையில் உள்ள மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமானதாகும். அதுவும், மேம்பட்ட நவீன மருத்துவ வசதிகள் அரிதாக இருக்கின்ற தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு இது இன்னும் கூடுதல் சிரமமானதாக இருக்கிறது.

விழிப்புணர்வின்மை: சிகிச்சையைப் பெற தாமதிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கும் அம்சங்களாக புற்றுநோய் குறித்து சமூகத்தில் நிலவும் அவப்பெயர், இழிவாகப் பேசுதல் மற்றும் விழிப்புணர்வின்மை ஆகியவையும் இருக்கின்றன. நகரங்களில் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த, கல்வியறிவு பெற்ற சில நபர்கள் கூட மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய தவறான கண்ணோட்டம், அவப்பெயரின் காரணமாக மருத்துவ உதவியை தேடிப் பெறுவதை தவிர்க்கின்றனர். இந்த தயக்கமே, நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதற்கும் மற்றும் அதன் தொடர்ச்சியாக சிகிச்சை விளைவுகள் பயனளிக்காமல் போவதற்கும் காரணமாக இருக்கிறது.

காரணம் என்ன?: புற்றுநோய்க்கு காரணம் என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரு காரணி இல்லை என்றாலும் கூட உணவுமுறை, உடல்சார் செயல்பாடு மற்றும் உடல்எடை போன்ற இடர் காரணிகள் புற்றுநோய் உருவாவதற்கு பங்களிப்பை செய்கின்றன. ஹார்மோன் சார்ந்த மாற்றங்களும் ஒரு கணிசமான காரணியாக இருக்கிறது. 90% மார்பக புற்றுநோய் நேர்வுகளுக்கும், ஹார்மோன் சார்ந்த அம்சங்களுக்கும் தொடர்பிருக்கிறது.

தடுப்பது எப்படி: மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது. பெண்கள் தாங்களாகவே சுயமுனைப்புடன் நடவடிக்கைகளை எடுக்க முடியும். 21-25 என்ற இளம் வயதிலேயே தொடங்கப்படும் மார்பக சுயபரிசோதனைகளை குறித்த காலஅளவுகளில் செய்வது, ஆரம்ப நிலையிலேயே அதன் அறிகுறிகளை கண்டறிய நிச்சயம் உதவும்.

பரிசோதனை அவசியம்: மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு மரபணு சார்ந்த ஸ்க்ரீனிங் சோதனை மிக முக்கியமானது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வருடாந்திர அடிப்படையில் ஸ்க்ரீனிங் செயல்பாடாக மேமோகிராம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதும், மார்பக புற்றுநோயின் இடரைக் குறைப்பதற்கு இன்றியமையாதது.

Breast Cancer Awareness Month 2023: Women from the age group 40 Years have witnessed the rising trend of Breast Cancer

நம்பிக்கை: தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் மேம்பாடுகளும், புதிய கண்டுபிடிப்புகளும், மார்பக புற்றுநோய்க்கு எதிரான போரில் நம்பிக்கையை வழங்குகின்றன. பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே கண்டறியும்போது, சிகிச்சையினால் குணம்பெறும் விகிதம் மிக அதிகமாக இருக்கும். முற்றிய நிலையிலுள்ள நபர்களுக்கும் கூட வெற்றிகரமான சிகிச்சை பயன்கள் கிடைக்கப் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மார்பகம் முழுவதையும் சிகிச்சையில் அகற்றிவிடுவார்கள் என்பது போன்ற தவறான கண்ணோட்டங்களை மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மிக முக்கியம். புற்றுக்கட்டி மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டும் அகற்றிவிட்டு, மார்பகத்தின் பெரும்பான்மையான பகுதியை தக்கவைப்பதென்பது சாத்தியமுள்ள விருப்பத்தேர்வாக இப்போது இருக்கிறது. இதன்மூலம் நீண்டகாலம் உயிர்வாழும் வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கும்.

இந்தியாவில் அதிகரிப்பு: இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் புள்ளிவிவரம் கவலை தருவதாகவே இருக்கிறது. எனினும், உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டியதற்கான ஒரு அறைகூவலாகவும் இந்த புள்ளிவிவரம் இருக்கிறது. முற்றிய, இறுதி நிலையில் நோய் கண்டறியப்படுவது, இந்நோய் குறித்த தவறான கண்ணோட்டம், அவப்பெயர் மற்றும் விழிப்புணர்வு குறைவாக இருப்பது போன்ற பெரும் சவால்களை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, செயல்பட்டு தீர்வு காண்பது அவசியம்.

விழிப்புணர்வு அவசியம்: உரிய காலஅளவுகளில் செய்யப்படும் ஸ்க்ரீனிங் சோதனைகளின் மூலம் தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிவதும், ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை கடைப்பிடிப்பதும், மார்பக புற்றுநோய் வரும் இடரை கணிசமான அளவு குறைக்கக்கூடும். ஒருங்கிணைந்த முயற்சிகளின் வழியாக சிகிச்சை விளைவுகளை நம்மால் மேம்படுத்த முடியும்; மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையின் மூலம் குணமளித்து, ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நிச்சயம் சாத்தியமானதே. மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது என்பது யதார்த்தமான உண்மை; எனினும், அதுகுறித்த அறிவு, விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையின் மூலம் இதனை பெருமளவு குறைப்பதற்கு நம்மால் திறம்பட செயலாற்ற முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார் டாக்டர் வேத பத்மபிரியா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+