வாய்ப்புண்ணுக்கு பெஸ்ட் டிப்ஸ்கள்.. கோவக்காய் போதுமே.. வாய் புண்களை ஆற்றும் சூப்பர் இலைகள்.. அருமை
சென்னை: வாய்ப்புண் வருவது சாதாரண விஷயம் என்றாலும், அப்படியே விட்டுவிட்டால் பல உடல் உபாதைகளை கொண்டுவந்து விட்டுவிடும். அந்தவகையில், ஆரம்ப கட்டத்திலுள்ள புண்களை, இயற்கையான முறையில், எப்படி குணமாக்குவது தெரியுமா?
வாயில் புண் கடினமாகிவிட்டால் அதிக வலி ஏற்படும்.. சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது.. உதடுகளும் வீங்கிவிடும்.. வாய்ப்புண்கள் என்பது, எந்த வயனதிருக்கு வேண்டுமானாலும் வரலாம்..

அலர்ஜி: சாப்பாடு, மருந்துகளில் அலர்ஜி இருந்தால் வாய்ப்புண்கள் வரும்.. உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு வாய்ப்புண் வரலாம்.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் வரலாம்.
வெற்றிலை, புகையிலை, பான்மசாலா, சிகரெட், மதுபானம் போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் வாய்ப்புண் வரலாம்.. இரைப்பையில் புண் இருந்தாலும் வாய்ப்புண் வரலாம். சத்தான உணவை சாப்பிடாதவர்கள், மனஅழுத்தம் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கும் வாய்ப்புண் வரலாம்.. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்திலும், அதேபோல, கருத்தடை மாத்திரைகளாலும்கூட, வாய்ப்புண் வரலாம். சூடாக காபி, டீ குடித்தாலும் வரலாம்.
வெற்றிலை: இந்த வாய்ப்புண்கள் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமானால், முதலில் சத்தான உணவை சாப்பிட வேண்டும்.. அடுத்ததாக, வாய் சுகாதாரம் பேண வேண்டும்.. சிகரெட், வெற்றிலை, புகையிலை, பான்மசாலா, மதுபானம் போன்றவற்றை நிறுத்த வேண்டும்..
அதற்கு பதிலாக, சத்தான காய்கறிகளையும், முளை கட்டிய பயிறுகளையும், கொண்டை கடலை, பச்சை பட்டாணி, கோதுமை, ராகி, சோயாபீன்ஸ், பால், தயிர், மோர், முட்டை, ஈரல், நண்டு, கீரை, வெல்லம், தேன், பேரீச்சம்பழம் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
வாய்ப்புண்: வாய்ப்புண்களுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது.. முடிந்தால் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பினாலே, புண்கள் ஆறுமாம்.. அல்லது கோவைக்காயை மோருடன் அரைத்து குடித்தாலும் வாய்ப்புண்கள் அகலும். மீன், மாமிசங்களை சாப்பிடும்போது, உடலில் அமில தன்மையை அதிகரிக்க செய்துவிடும் என்பதால், புண்கள் ஆறும்வரை இவைகளை தவிர்க்க சொல்கிறார்கள்.
பெரும்பாலும் வாய்ப்புண்ணுக்கு வைட்டமின் C குறைவுதான் காரணம் என்பதால், ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்.. அல்லது காய்ச்சாத குளிர்ந்த பாலை, வாய்ப்புண்களின் மீது அடிக்கடி வைத்தாலும் தீர்வு கிடைக்கும்..
வெண்ணெய்: தேன் அல்லது வெண்ணெய்யை, வாய்ப்புண்ணில் தடவி வந்தால், விரைவில் குணமாகும்... அல்லது பாலில் தேனை கலந்து குடித்து வந்தாலும், வாய்ப்புண் குணமாகும். அல்லது தேங்காய் எண்ணெயுடன் தேனை கலந்து புண்களில் தடவினாலும் நிவாரணம் கிடைக்கும். தேங்காய் பாலுக்கு புண்களை ஆற்றும் சக்தி உள்ளதால், தேங்காய் பாலை குடிக்கலாம். இந்த லிஸ்ட்டில் இளநீரையும் சேர்த்து கொள்ளலாம். காரணம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருப்பதுபோல பார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல, ஒருசில மூலிகைகளும் வாய்ப்புண்ணுக்கு மருந்தாகிறது.. குறிப்பாக, புதினா இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அதன் சாற்றை மட்டும் எடுத்து, புண்களின்மீது தடவினால் எரிச்சல் நீங்கி, குணமாகும்.
துளசி இலைகள்: துளசி இலைகளை நான்கைந்து கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலும், வாய்ப்புண்கள் ஆறும். அல்லது மணத்தக்காளியின் ஐந்தாறு இலைகளை எடுத்து, கழுவி அப்படியே மென்று அதன் சாற்றை விழுங்கினாலும் புண்கள் ஆறும்.. இந்த மணத்தக்காளி, கொய்யா இலைகளும்கூட வாய்ப்புண்களை ஆற்றக்கூடியவைதான்.. இலைகளை கழுவி சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி துவையல் போல அரைத்து சாப்பிடுவதால் வாய்ப்புண்கள் மெல்ல ஆறும்..
மொத்தத்தில், குடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும். வயிறு சுத்தமாக இருந்தாலே வாயில் புண்கள் ஏற்படாது. அதேபோல, பல் டாக்டரை வருடம் 2 முறையாவது சந்தித்து வாயை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை: ஆனால், இவையெல்லாம் தற்காலிக தீர்வு தான் என்றாலும், வெகு நாட்களாக வாய்ப்புண்கள் இந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். ஏனென்றால், இதுவே, நாளடைவில் வாய் கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, வாய்ப்புண் 2 நாட்களில் ஆறாவிட்டால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிந்து முறையான சிகிச்சையை மருத்துவர்களிடம் பெற வேண்டியது கட்டாயமாகும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications