கழுத்து பகுதியில் இந்த அறிகுறி இருந்தால்! உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருக்கு!
சென்னை: கழுத்து பகுதியில் இருக்கும் இந்த அறிகுறியால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியா நீரிழிவு நோயாளிகளின் தலைநகரம் என சொல்லப்படுகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறையும் உணவுமுறையும்தான் காரணம்.

இந்த நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது எளிதாகும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமானால் உடனடியாக நம் உடல் சில அறிகுறிகளை எல்லாம் காட்டும்.
அதை வைத்து சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்காத வண்ணம் நாம் தவிர்க்கலாம். பொதுவாக சிலருக்கு கழுத்து பகுதியில் கருப்பு நிறத்தில் திட்டு திட்டாக இருக்கும். அவர்களில் சிலர் இந்த அறிகுறியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதை அழுக்கு என கூறி, எத்தனை முறை தேய்த்தாலும் போகவில்லை என்றும் கூறிவிடுவார்கள். ஆனால் கழுத்து பகுதி கருப்பாக இருப்பது, உடலில் ஏற்படும் பிரச்சினைகளை குறிக்கிறது. கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு நிறம் சர்க்கரை நோயுடன் தொடர்புடையதாகும்.
இது போல் கரும்திட்டுகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வரும் போது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ஏற்படும். இதனால் கழுத்து கருப்பாக மாறத் தொடங்குகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது.
அடிக்கடி பசி எடுத்தல், வாய் உலர்ந்து போதல், இடுக்குகளில் அரிப்பு, கண் பார்வை பாதிப்பு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளிட்டவை இதர அறிகுறிகளாகும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வாழ்வியல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வெள்ளையாக இருப்பதை உண்ணவே கூடாது, சர்க்கரை, மைதா, வெள்ளை நிற அரிசி உள்ளிட்டவை ஆகும்.
அதற்கு பதிலாக பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது போல் தினமும் நடைப்பயிற்சி, தியானம் உள்ளிட்டவை செய்யலாம். மேலும் முடிந்தால் சிறிய அளவிலான உடற்பயிற்சியையும் செய்யலாம்.
ஆரம்ப நிலையிலேயே சர்க்கரை நோயின் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் சிறப்பு. சிலருக்கு நீரிழிவு வருவதற்கான நிலையில் இருப்பர். அவர்கள் நிச்சயம் வாழ்வியல் முறையை மாற்றினால் சர்க்கரை நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications