மாதுளை கொட்டை.. குட்டி குட்டி விதைகளில் ஒளிஞ்சிருக்கும் ஆச்சரியம்.. ஆயுசை கூட்டும் "மாதுளம் கொட்டை"
சென்னை: பழங்களை போலவே, அந்த பழங்களின் கொட்டைகளிலும் மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன.. ஆனால், பழங்களே கொட்டையாகவும், கொட்டையே பழமாகவும் அமைந்திருப்பது இந்த மாதுளையில்தான்..!!
மாதுளையை அதன் கொட்டைகளுடன்தான் சாப்பிட சொல்கிறார்கள்.. காரணம், மாதுளையில் உள்ள விதைகளில் நிரம்பியிருப்பது வெறும் நார்ச்சத்துக்கள்தான்.. பழங்களை சாப்பிட்டாலே மலச்சிக்கல் தீரும் என்பார்கள்.. ஆனால், இந்த மாதுளையில் உள்ள நீர்ச்சத்தும், நார்ச்சத்தும், மலச்சிக்கலை விரட்டியடிப்பதில் முதன்மை பெறுகிறது.

இந்த பழத்தின் கொட்டைகள், நம்முடைய சருமத்துக்கும் கவசமாகிறது.. மாதுளையில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால், புற்றுநோய் பாதிப்புகளை தடுத்து நிறுத்தக்கூடியது.. அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு, மாதுளம் பழத்தை சாப்பிட வலியுறுத்துகிறார்கள்.
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த இந்த மாதுளை மிகச்சிறந்த உணவாகும்.. வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்குவதுடன், இதய நோய் பிரச்சனைகளையும் தீர்க்கிறது.. மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
அனைத்து பழங்களிலும், பெண்களுக்கு மிகவும் பயன்தரத்தக்க பழம் என்றால், அது இந்த மாதுளைதான்.. கர்ப்பிணி பெண்களுக்கு மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது.. கருவிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைய, இந்த மாதுளை துணைபுரியுமாம்.
புற்றுநோய் மாதுளை ஜூஸ் குடித்தால், ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இருந்தாலும் நீங்கிவிடும்.. அதுமட்டுமல்ல, விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மாதுளை கொட்டைகள், இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.. அதுமட்டுமல்லாமல், பாலிபினால்களை கொண்டிருப்பதால், நினைவாற்றலை மேம்படுத்தி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு மாதுளம் பழத்தை, அதன் விதையுடன் ஜூஸ் தயாரித்து தருவது நன்மை பயக்கும்.
சர்க்கரை நோயாளி: இந்த பழத்தின் கொட்டைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன.. குறிப்பாக பாலிபினால்கள், ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவுவதால், நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது.. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்றுகளையும், நோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது. கீல்வாதம் மட்டுமல்லாமல், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு தீர்வை தருகிறது இந்த மாதுளையின் கொட்டைகள்.












Click it and Unblock the Notifications