மீனின் பித்தப்பையை பச்சையாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகுமா? பீகார் பெண்ணுக்கு நடந்தது என்ன?
ராஞ்சி: பீகார் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த பெண் ஒருவர் நீரிழவு நோய் குணமடைவதற்காக போலி மருத்துவரின் பேச்சை கேட்டுக் கொண்டு மீனின் பித்தப்பையை பச்சையாக சாப்பிட்டதால் அவர் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்.
பீகார் மாநில ராஞ்சியை சேர்ந்தவர் சீதா தேவி (48). இந்த பெண்ணுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நிறைய மருத்துவர்களிடம் மருந்து சாப்பிட்டும் குணமடையவில்லை என கருதினார். பொதுவாக சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாமே தவிர குணப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

ஆனால் இதை நம்பாத சிலர் யாரோ போலியான ஆசாமிகள் சொல்வதை நம்பி எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற அளவுக்கு எதை சாப்பிட்டால் இந்த நோய் தீரும் என்ற நிலைக்கு போய்விட்டார்கள். இதற்கு சீதா தேவியும் விதிவிலக்கல்ல.
கவலையில் சீதா தேவி: சர்க்கரை நோய் குணமாகவில்லையே என கவலையில் இருந்த சீதா தேவிக்கு போலி மருத்துவர் ஒருவர் குறித்த தகவலை அறிந்தார். உடனே அந்த மருத்துவரை சந்தித்து தனது நீரிழிவு நோய் மருந்து மாத்திரை இல்லாமல் குணப்படுத்த வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த போலி மருத்துவரும் அந்த பெண்ணிடம் நான் சொல்வதை செய்தால் உன் தலைமுறைக்கே நீரிழிவு நோய் வராது என பீலா விட்டிருக்கிறார்.
பித்தப்பையை சாப்பிட அறிவுரை: அதாவது ரோகு மீனின் பித்தப்பையை 3 நாட்களுக்கு பச்சையாக சாப்பிட வேண்டும். ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு மற்ற இரு நாட்கள் விடக் கூடாது என்ற கண்டிஷன்களை எல்லாம் சொல்லி அனுப்பியுள்ளார். இது உண்மை என நம்பிய சீதா தேவி, சர்க்கரை நோய் குணமாகும் என்ற ஆசையில் ரோகு மீனை வாங்கி அதில் உள்ள பித்தப்பையை எடுத்து பச்சையாக சாப்பிட்டுள்ளார்.
3 நாட்கள் சாப்பிட்ட பெண்: முதலில் கொமட்டியுள்ளது. இருந்தாலும் நோய் குணமாக வேண்டுமே என்பதா்ல் அவர் பச்சையாக சாப்பிட்டுள்ளார். 3 நாட்கள் தொடர்ந்து ரோகு மீனின் பித்தப்பையை சாப்பிட்ட அந்த சீதா தேவிக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து சர்க்கரையின் அளவும் அதிகரித்தது. உடனே சீதா தேவியை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுநீரகம் வீக்கம்: அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இரு முறை ஹீமோடயாலிசிஸ் செய்யப்பட்டது. அப்போதுதான அவருடைய சிறுநீரகம் வீங்கியுள்ளது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரோகு மீனின் பித்தப்பையை பச்சையாக சாப்பிட்டது குறித்து கூறினார். அவருடைய உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பயாப்சி பரிசோதனை: அவருடைய சிறுநீரகத்தில் திசுக்களை எடுத்து பயாப்சி செய்த போது அதில் அதிக தொற்று இருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் 7ஆவது நாள் முதல் சிறுநீரகம் சீராக இயங்கி வருவதாகவும் அவருடைய நிலை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர் 2 வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர்.
சிறுநீரக பாதிப்பு: ஆசிய நாடுகளான இந்தியா, கிழக்கு, தென்னிந்தியாவில் உள்ள சில பகுதிகளில் பச்சை மீனின் பித்தப்பையை அப்படியே சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இது சர்க்கரை நோய், ஆஸ்துமா, பார்வை கோளாறுகளையும் குணப்படுத்தும் என நம்பப்படுகிறது. இதுகுறித்து சீதா தேவி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில், ரோகு மீனின் பித்தப்பையை சாப்பிட்டதால் மட்டுமே அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படவில்லை.

பித்தப்பையில் என்ன இருக்கு: எந்த வகை மீனின் பித்தப்பையை சாப்பிட்டாலும் இதே நிலைதான் ஏற்படும். மீனின் பித்தப்பையில் சிப்ரினால் எனும் நச்சு இருக்கிறது. இதை உட்கொண்டால் மனிதர்களுக்கு சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் வாந்தி, சிறுநீர் கழிப்பது குறைவு, வயிற்று வலி உள்ளிட்டவை ஏற்படும். சில நேரங்களில் சிறுநீரகம் செயலிழந்து இறப்பை கூட ஏற்படுத்தும். எனவே மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை முறையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications