புளியாரைக்கீரை.. வள்ளலார் சொன்னது இதைதான்.. புளியாரை இலை சாறு போதும்.. ஆயுசு நீளும்.. அற்புத புளியாரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகள் என்றாலே நமக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், எத்தனையோ பலன்தரத்தக்க கீரைகளை, அன்றாட வாழ்வில் தவிர்த்து விடுகிறோம். அப்படிப்பட்ட அருமருந்தாகும் கீரைதான் புளியாரைக்கீரை.

இது ஒரு குளிர்ச்சிக்கீரை. மெல்லிய தண்டு பகுதியை கொண்டது.. தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்று, அன்றே சொன்னார் வள்ளலார்.

Do you know Excellent Benefits of Puliyarai Keerai and Puliyarai Leaf is the Best Medical remedy for Piles

கீரை மசியல்: உடல் வெப்பத்தை போக்கக்கூடியது. அளவுக்கு அதிகமான சூட்டால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மூலநோய் பாதிக்கப்பட்டவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள், சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கீரையை மிஸ் பண்ணவே கூடாது.

வயிற்றுக்குள் உணவாகவும், சருமத்துக்கு மருந்தாகவும் இந்த இலையை பயன்படுத்திக் கொள்ளலாம்... இந்த கீரையை மற்ற கீரைகளை போலவே, மசியலாகவோ, துவையல் அரைத்தோ சாப்பிடலாம். பாசிபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.. அதேபோல, இந்த புளியாரை கீரையுடன் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் உட்பட பல கோளாறுகள் நீங்கும்..

மூலநோய்: இந்த கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டால், மூலநோய் ஓடியே போய்விடும்.. அல்லது புளியாரைக் கீரையை, பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதுடன், பசியும் நன்றாக எடுக்கும்.

அடிக்கடி சமையலில் இந்த கீரையை சேர்த்து கொள்வதால், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்.. பித்த மயக்கம் நீங்கும்.. மூலநோய்ப் பாதிப்புகள் அகலும்... வெறும் இலைகளை மட்டுமே பறித்து, சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், காய்ச்சல் குணமாகும்.. அல்லது இந்த கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டாலும் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும் என்கிறார்கள்..

கண் நோய்கள்: இந்த தண்ணீரில் கண்களை கழுவினால், கண் நோய்கள் நீங்கும்.. கண் பார்வை கூர்மைப்படும். இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், பல், ஈறுகள் வலுவடையும்.. வாய்ப்புண்கள் குணமாகும்..

இந்த இலையில் சிலர் டீ போட்டு குடிப்பார்கள்.. ஒரு பாத்திரத்தில், தண்ணீர் வைத்து, ஒரு கொத்து இலைகளையும் கொட்டி, நன்றாக காய்ச்சி வடிகட்டி, அத்துடன், தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள்.

சரும அலர்ஜி: சருமத்தில் அலர்ஜி இருந்தாலோ அல்லது மருக்கள் இருந்தாலோ, புளியாரை இலையில் சாறு எடுத்து, அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து பற்றுபோல போட்டு வந்தால் மருக்கள், பருக்கள் உடைந்துவிடும். அல்லது வெறும் இலைச்சாற்றை பருக்கள், கொப்பளங்கள் மீது தடவி வந்தாலும் தீர்வு கிடைக்கும்.

உடலில் எங்காவது அடிபட்டுவிட்டால், அல்லது வீக்கம் நிறைந்து காணப்பட்டால், இந்த புளியாரை இலையின் சாறுகளை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.. இந்த இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து முகத்தில் மசாஜ் போல செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதுடன், தோல் சுருக்கமும் நீங்கும்.. முகமும் பொலிவு பெறும்..

இலைகள்: தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இந்த கீரை அருமருந்தாகிறது.. தூங்குவற்கு முன்பு, இந்த இலைகளை கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் நன்றாக தூக்கம் வருமாம்.

இந்த கீரையுடன் சிறிது வேப்பங்கொழுந்து, நான்கைந்து மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து வெறும்வயிற்றில் சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்குமாம்.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

அதேபோல, புளியாரைகீரையில் சாறு எடுத்து, அதில், சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டால், மொத்த பித்த நோய்களும் குணமாகுமாம்.. ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே, மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+