ஈர்க்கு ஈர்க்குதே.. அதுவும் கறிவேப்பிலை ஈர்க்கு.. தலை முதல் கால் வரை பலன்.. இந்த குச்சியை எறியாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கையின் ஈர்க்கு எந்த அளவுக்கு நமக்கு நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே நமக்கு பெரிதும் பயன்படுவது கறிவேப்பிலையின் ஈர்க்குகள். இதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்..

Do you know the Amazing Health uses Curry Leaf Eerkku and curry leaves eerkku is the Best for pregnant Women

சர்க்கரை நோயாளி: சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்... நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்.. இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.. தலைமுடி நன்றாக கருகருவென வளரும்.. கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் முழுவதுமே வெளியேறிவிடும்... அத்துடன் கல்லீரலுக்கும் பாதுகாப்பு தரும்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கைகொடுப்பதே இந்த இலைகள்தான்.. காரணம், கர்ப்பிணிகளுக்கு முதல் 3 மாதங்களுக்கு பசியின்மை, வயிற்றுப்பொருமல், குமட்டல், அஜீரணம் இப்படி பல தொந்தரவுகள் இருக்கும். இதற்கெல்லாம் கறிவேப்பிலை பொடியே பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது.. குழந்தைகளின் மூளை செயல்பாட்டை அதிகரிக்க செய்து, நினைவு திறனையும் கூட்டுகிறது இந்த கறிவேப்பில்லை.

துவையல்: அந்தவகையில், கறிவேப்பிலைகள் எந்தவகையில் இருந்தாலும் அதை தவிர்க்காமல் சாப்பிட்டுவிட வேண்டும். சரியாக பசியெடுக்காவிட்டால், இந்த கறிவேப்பிலை இலைகளை நிழலில் காயவைத்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து அரைத்து வைத்து கொண்டாலேபோதும். இதை சுடுசோற்றில் சிறிது நல்லெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கி, நன்றாக பசியெடுக்கும்.

ஆனால், கறிவேப்பிலையை சமையலில் பயன்படுத்தும்போது, அதன் ஈர்க்குகள் அதாவது கறிவேப்பிலையின் இளம் குச்சிகளை கீழே தூக்கி போட்டுவிடாமல், சமையலில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். ரசத்துக்கு மிளகு சீரகம் அரைத்தால், அதனுடன் இந்த கறிவேப்பிலையின் இளங்குச்சிகளையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தாளித்தால் கூடுதல் மணம் கிடைக்கும்.

முருங்கை ஈர்க்கு: அல்லது கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு இரண்டையும் சேர்த்து ரசம் போல வைக்கலாம்.. இவை இரண்டுமே ரத்தவிருத்திக்கு உதவக்கூடியவை.. இவை இரண்டையும் வைத்து துவையல் போலவும் செய்யலாம். மாதவிடாய் நேரத்தில், இந்த துவையல் மிகவும் பெண்களுக்கு கைகொடுக்கும். சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜீரண கோளாறுகளும் நீங்கும்.. அதேபோல, இவைகளை பயன்படுத்தி கஷாயம் செய்யலாம்..

முருங்கை ஈர்க்கு , வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு , கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்திக்கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில் அனைத்து ஈர்க்குகளையும் சேர்த்து, இவைகளுடன் வசம்பு சேர்த்து நன்கு கருக்க வேண்டும்.

பிறகு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வைத்து, சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், வயிறு சம்பந்தமான பிரச்சனை தீரும். வயிற்று இரைச்சல் , வயிற்றுப்பொருமல், ஜீரணக் குறைபாடுகளும் நீங்கும்.

வேப்ப ஈர்க்கு: அதுமட்டுமல்ல, தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்பட்ட செரியாமை, அது தொடர்பாக ஏற்படும் வாந்தி போன்றவற்றை நிறுத்த வேண்டுமானால், இதற்கும் கறிவேப்பிலை ஈர்க்குகள் உதவுகின்றன. கறிவேப்பிலை ஈர்க்குகளுடன், வேப்ப ஈர்க்குகளையும் சேர்த்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்தால் நலம் கிடைக்கும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+