கருப்பு கல்லீரலை சிவப்பாக மாற்றும்! சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்! அசத்தும் கறிவேப்பிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கறிவேப்பிலை இயற்கை கொடுத்த கொடை. அது பல்வேறு பலன்களை நம் உடலுக்கு தருகிறது. இதை ஒதுக்கி மட்டும் வைக்காதீங்க!

உணவே மருந்து என்பது சித்தர்களின் வாக்கு! இது 100க்கு 100 உண்மை என்பது அதன் மூலம் பலன் கிடைத்தால் மட்டுமே நமக்கு தெரிகிறது. ஆனால் இது தெரியாத சிலர் நிறைய மருத்துவ குணமுள்ள உணவு பொருட்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.

Do you know the excellent benefits of Curry leaves (Karuvepillai)?

எந்த ஒரு உணவு பொருளும் தேவையின்றி நமக்கு இயற்கை கொடுக்கவில்லை. உணவு பொருளின் கொட்டை, ஓடு, தோல் உள்ளிட்ட உண்ண முடியாத, உண்ண கூடாதவற்றை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவற்றை உண்ண வேண்டும். பொதுவாக எல்லார் வீடுகளிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யும் ஒரே தவறு கொத்தமல்லி, கறிவேப்பிலைகளை ஒதுக்கி வைப்பதுதான்.

கறிவேப்பிலை உணவு பொருட்களில் போட்டால் மிகவும் மணமாக இருக்கும். அதனால்தான் காரியம் ஆனதும் கறிவேப்பிலை போல் தூக்கி போட்டுவிட்டார்கள் என உவமையே உள்ளது. அப்படி தூக்கி போடும் கறிவேப்பிலைக்கு எத்தனை பயன்கள் உண்டு தெரியுமா? இதில் கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் உள்ளன.

அது போல் விட்டமின்களான ஏ, பி, சி, இ ஆகியவை உள்ளன. விட்டமின் ஏ கண் பார்வைக்கு நல்லது. விட்டமின் சி முடி, நகம், எலும்புகளுக்கு நல்லது. இந்த கறிவேப்பிலையில் கொழுப்பு சத்தே இல்லை. எல்லாவிதமான உடல் உபாதைகளையும் சரி செய்யும் அருமருந்து இந்த கறிவேப்பிலை. இளநரைக்கு உகந்த மருந்து. இதற்கு டை அடிப்பதை காட்டிலும் இயற்கையாக கிடைக்கும் கறிவேப்பிலையை உண்மலாமே!

இந்த கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் உள்ளதால் நரையை நீங்கி முடிக்கு கருமையை தரும். முடி வளர்ச்சிக்கும் மிக்க நல்லது. முடிகளின் வேர்களையும் சரி செய்யும். இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை நோய் குணமாகும். போலிக் அமிலமும் உள்ளது. கால்சியம் சத்து உள்ளதால் எலும்புகள், பற்களின் பலத்திற்கு நல்லது.

இந்த கறிவேப்பிலை சாப்பிட்டால் மாலைக்கண் நீங்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்யும். சிறுவயதிலிருந்து கறிவேப்பிலை சாப்பிட்டால் கண் புரை நோய் வராமல் தடுக்கும். ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும். உடல் எடையை குறைக்கும். இதில் கொழுப்பு இல்லாமல் நார்ச்சத்து மட்டுமே இருப்பதால் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதயத்திற்கு இதமளிக்கிறது. ரத்த அடைப்புகளை நீக்கும். கல்லீரல் செயல்பாடுகளை அதிகரிக்கும். கல்லீரலில் உள்ள கழிவுகளும் நச்சுகளும் நீங்கும். மலச்சிக்கலை நீக்கும். மூலநோயை தடுக்கும். குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நாக்கில் ருசி தெரியாவிட்டால் இந்த கறிவேப்பிலையில் துவையல் செய்து சாப்பிட்டால் நா ருசி அறியும். இப்படிப்பட்ட கறிவேப்பிலையை விட்டுவிடாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+