முள்ளங்கியை.. மீனில் சேர்க்கலாமா.. மீனுடன் சேர்க்க கூடாத பொருட்கள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்
சென்னை: மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா?
2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் மீன் + முட்டை.

மீனுடன் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாதாம்.. ஒன்றன் பின் ஒன்றாகவும் சாப்பிடக்கூடாதாம்.. இரண்டுமே புரோட்டீன் நிறைந்த உணவு என்பதால், புரத ஒவ்வாமையை இவைகள் ஏற்படுத்திவிடுவதுடன், தோல் வெடிப்புகளையும் தந்துவிடும். அதனால்தான், மீன், முட்டையை ஒருசேர சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள். மீன், கருவாடு இதில் எது சாப்பிட்டாலும், பால், தயிர் சாப்பிடக்கூடாது.
கீரைகள்: தயிருடன், மீன், கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு நிறையவே உண்டு.. சத்துக்கள் அதிகம் நிறைந்த மீன்களுடன், தயிரை சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள்.
அதேபோல, மீன்களுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இவைகளை ஒன்றாக சாப்பிட்டால், சளி, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளை தந்துவிடும்.. அதேபோல, திப்பிலியுடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், குடல் பாதிப்பு வந்துவிடும்.. அதனால், மீன் பொறித்த எண்ணெய்கூட, திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.
எதிரெதிர் விளைவு: ஒரே குணங்களை கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடுவதைபோல, எதிரெதிர் குணங்களை கொண்ட உணவுப்பொருட்களையும் நாம் சேர்த்து சாப்பிடக்கூடாது.
இதற்கு சரியான உதாரணம், பிரியாணியில் நாம் சாப்பிடும் தயிர் வெங்காய பச்சடிகள்தான்.. இந்த பச்சடியை தவிர்க்க சொல்கிறார்கள். காரணம், தயிரை பொறுத்தவரை குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தந்துவிடுகிறது..
வாழைப்பழம்: அதனால்தான், அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், தயிரோடு மட்டும் கலந்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அதேபோல, வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது... வாழைப்பழம் சாப்பிட்டதுமே, தயிர், மோர் சாப்பிடக்கூடாது. தேனும், நெய்யும் சேர்த்து சாப்பிடக்கூடாது. வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.
தவிர்க்கலாம்: ஒருமுறை, பிரபல ஆயுர்வேத டாக்டர். ரேச்சேல் ரெபெக்கா ஒரு பேட்டியில் சொன்னபோது, "அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே, நமக்கு ஆரோக்கியம் நிச்சயம்.. மீனுடன் தயிருடன் சாப்பிடக்கூடாது.. நல்லெண்ணெய்யில் இறைச்சியில் சமைக்கக்கூடாது.. நாம் சாப்பிட்டதுமே தூங்கக்கூடாது..
உஷ்ணமான உணவை சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது.. குளிர்ச்சியான கற்றாழை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், உடனே அன்னாசி, பப்பாளி போன்ற சூடு தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது.
உருளைக்கிழங்கு: நமக்கு பெரும்பாலான உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமே அஜீரணம்தான்.. அதனால், உளுந்து, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தயிர், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே போதும்.. சுருக்கமாக சொல்லப்போனால், ஜீரணம் நமக்கு எளிதாகிவிட்டாலே, நோய்கள் அண்டாது" என்கிறார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications