முருங்கை ஓகே.. அதென்ன கல்யாண முருங்கை? இந்த இலையை இப்படி சாப்பிடுங்க.. வீட்டில் ஹேப்பி நியூஸ் தான்
சென்னை: முருங்கை தெரியும், அதென்ன கல்யாண முருங்கை? இந்த பயன்பாடுகள் என்ன? இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
இந்த செடியை யாரும் விதை போட்டு வளர்ப்பதில்லை.. பொதுவெளிகளிலும், சாலைகளிலும் இயல்பாகவே வளரக்கூடியது.. அதனால்தானோ என்னவோ, இதன் மகிமை யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.

இந்த கல்யாண முருங்கையின் இலைகள், பூக்கள், விதைகள், பட்டைகள் என மொத்த பாகங்களுமே மருத்துவ குணம் நிறைந்தது.. முள் முருங்கை, முருக்க மரம், முள் முருக்கு என்றெல்லாம் இந்த செடியை அழைப்பார்கள்..
வேப்பிலை: இந்த இலைகள் கிட்டத்தட்ட வேப்பிலைகள் போலவே பயன்படுத்தப்படுகிறது.. கல்யாண முருஙகை இலைகளை உடலில் பூசி குளிப்பார்கள்.. மிகச்சிறந்த கிருமி நாசினியாக இது செயல்படக்கூடியது.. இந்த இலையுடன் சிறிது கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து அரைத்து பூசி குளித்து வரும்போது, சொறி, சிரங்கு குணமாகும்.. சளி, இருமல் தொல்லையும் தீரும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கல்யாண முருங்கை கைகொடுத்து உதவுகிறது.. இந்த இலையில் ஜூஸ் தயாரித்து குடிப்பதால், ஊளைச்சதை குறைகிறது..
அதேபோல, குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால், வேப்பிலை கொழுந்தினை அரைத்து தருவதுபோல, இந்த இலைகளுடன் சிறிது கல் உப்பை சேர்த்து அரைத்து தருவார்கள்.. அல்லது கல்யாண முருங்கை இலையிலிருந்து சாறு எடுத்து, அதனை சுடுநீரில் கலந்து, தேனை சிறிது ஊற்றி குழந்தைகளுக்கு தருவார்கள்.. வெறும் வயிற்றில் இதை குடிக்கும்போது, வயிற்றிலிருக்கும் பூச்சிகள் வெளியேறிவிடும். பெரியவர்களும் இதை சாப்பிடலாம்.
பத்தியம்: ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அடுத்த 2 மணி நேரத்துக்கு வேறு எதுவுமே சாப்பிடக்கூடாதாம்.. அன்றைய நாள் முழுக்க வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஆண்மையை பெருக்கும் சக்தி இந்த இலைகளுக்கு உண்டு என்பதால், இந்த ஜூஸ்களை குடித்து வரலாம். அல்லது மாதுளம்பழம் ஜூஸ் குடிக்கும்போது, இந்த இலைகளின் சாற்றினை அதில் கலந்து, சிறிது கசகசா பவுடரையும் சேர்த்து குடிக்க வேண்டுமாம். இப்படி 21 நாட்கள் குடித்தால் ஆண்மை பெருகும் என்பார்கள்..
கர்ப்பப்பை: பெண்களும் இந்த இலை சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் குறையும் நீங்கும்.. கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தாலும், கருமுட்டைகள் அதிகமாக உற்பத்தியாகுமாம்..
அல்லது இந்த இலையை கசக்கி சாறு எடுத்து, மாதவிடாய் வருவதற்கு 3 நாள் முன்பும், மாதவிடாய் முடிந்த பிறகு 3 நாட்களும், வெறும் வயிற்றில் 3 மாதம் குடித்து வந்தால், குழந்தைப்பேறு கிடைக்குமாம். அதனால்தான் அரச மரத்துக்கு சக்களத்தி என்று இந்த கீரையை சொல்வார்களாம். கர்ப்பமான பெண்களுக்கு, இந்த இலையை சமைத்து தருவார்கள்..
தாய்ப்பால்: பாசி பருப்புடன் சேர்த்து வேகவைத்து தந்தால் இன்னும் சிறப்பு.. இதனால், கர்ப்பிணிகளின் சிறுநீர் எரிச்சல் தணியும். பாலூட்டும் பெண்களுக்கு, பால் சுரக்க வேண்டுமானால், இந்த இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்து சாப்பிட தருவார்கள்.. அல்லது இந்த இலையை பொடியாக நறுக்கி, சின்ன வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் தாராளமாக சுரக்குமாம்.
மாதவிடாய் கோளாறு உள்ளவர்களுக்கும், கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்கும் இந்த கல்யாண முருங்கை வரப்பிரசாதம் எனலாம்.. பிரசவத்திற்கு பின்பு கர்ப்பப்பையை சுத்தப்படுத்தம், பலப்படுத்தவும், இந்த கீரை உதவுகிறது.
அதாவது, இந்த கீரைகளை சுத்தம் செய்து, மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், கருப்பை சுத்தமாகும். அதனால்தான், "பெண்களின் மரம்" என்று இதனை சொல்வார்கள்.
டாக்டர் அட்வைஸ்: ஆனால், இப்படி உள்ளுக்குள் மருந்தாக சாப்பிட வேண்டுமானால், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்றே சாப்பிடுவது கட்டாயமாகும். அதுதான் முழு ஆரோக்கியமாகும்.
எப்படி பயன்படுத்துவது: இட்லிக்கு அரைக்கும்போது, இந்த இலைகளையும் சேர்த்து அரைத்து தோசை, இட்லி செய்யலாம். கல்யாண முருங்கையுடன், முருங்கைக்கீரையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும்.. அல்லது இந்த இலையிலிருந்து ரசம் செய்யலாம்.. துவையல் செய்யலாம்.. இந்த இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்யலாம்..
கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை ஒடித்து, நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடுமாம்.. எல்லா மண்ணிலும் சுலபமாக வளரக்கூடியது. சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்த காட்டுப்பகுதியில் இந்த கல்யாண முருங்கை மரங்கள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications