ஓமவல்லி.. சிறுநீரகத்தில் உப்பா? கண்ணில் அழற்சியா? ரெண்டு ஓமவல்லி இலை போதுமே.. சிற்றிலை தரும் சிறப்பு
சென்னை: நரையுள்ள தலைமுடியை கருப்பாக மாற்ற வேண்டுமானால், ஓமவல்லி இலையை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா? ஓமவல்லி பேஸ்ட் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லியில் வைட்டமின் C , A போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் நார்ச்சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.. இந்த இலையை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. முழங்கால் வலி, மூட்டுவலி முதல், கீல்வாதம்வரை உள்ள தொந்தரவுகளை போக்க ஓமவல்லியே பெஸ்ட் மருந்தாகிறது.

இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது. கண் அழற்சி உட்பட கண் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை நீக்கவும், நரம்புகளை பலப்படுத்தவும் ஓமவல்லி இலைகளின் பயன்பாடுகள் அதிகம்.
சிறுநீரகம்: சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட வைப்பதில் ஓமவல்லிக்கு மிகப்பெரிய பங்குண்டு. நம் ரத்தத்திலுள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்ற தூண்டுகிறது. அந்தவகையில், ஓமவல்லி இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளையும் கரைத்து வெளியேற்றுவதால், சிறுநீரகங்கள் பாதுகாக்கப்படுகின்றன
நுரையீரலின் பாதுகாவலனாக ஓமவல்லி திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜுரம், சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு என சுவாச கோளாறுகள் மொத்தத்திற்கும் ஒரே தீர்வை ஓமவல்லி இலைகள் தருகின்றன. ஓமவல்லி இலையை கசக்கி சாறு பிழிந்து, சிறிது சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்று போடும்போது, தலைவலி, ஜலதோஷம், நீர்க்கோத்தல் நீங்கிவிடும்.
தலைபாரம்: அதேபோல, ஓமவல்லி இலையை அரைத்து, அதை தண்ணீரில் கொட்டி கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும. அதில், சிறிது ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் தலை பாரமும், சளியும் குறையும். இந்த இலைகளில் நேரடியாகவே ஆவி பிடித்தாலும் பலன் தரும்.
கைக்குழந்தைகளுக்கு சளி, இருமல் என்றால், ஒரே ஒரு சிற்றிலை மட்டும் எடுத்து, நெருப்பில் வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, சங்கில் ஊற்றி தரலாம். பெரியவர்களுக்கு 3 இலைகள் போதும். இதனை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இதனால், அஜீரண பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவை இருந்தால், இந்த இலை சாற்றின் சில துளிகளை எடுத்துக் கொண்டாலே போதும்.
தழும்புகள்: முகத்தில் மருக்கள், பருக்கள், சிறு கட்டிகள், அம்மை பாதிப்பு தழும்புகள், போன்றவற்றிற்கும் ஓமவல்லி இலைகளை விழுதாக அரைத்து பற்றுப்போல போடலாம். நரைமுடி இருப்பவர்களும், ஓமவல்லி இலைகளின் விழுதினை தடவலாம். இந்த பேஸ்ட் தடவுவதால், வெள்ளை முடி கருப்பாக மாறும். தலைமுடிக்கும் குளிர்ச்சி கிடைக்கும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications