உங்கள் தொப்புளில் பஞ்சு பஞ்சாக உருளையாக அழுக்கு வெளியேறுகிறதா? என்ன காரணம்?
சென்னை: உங்கள் தொப்புளில் அவ்வப்போது பஞ்சு போன்று உருளையாக ஒரு கழிவு உள்ளே உருவாகின்றனவா? இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த அழுக்கு படியாமல் இருக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அதையும் தெரிந்து கொண்டால் சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.
இந்த அழுக்கை ஆங்கிலத்தில் belly button lint என்பார்கள். இது போன்ற பஞ்சு போன்ற அழுக்கு எடை அதிகரித்தவர்களுக்கு அதிகமாக இருக்க காரணம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

பொதுவாக உடம்பில் இருந்து வெளியாகும் கழிவுகளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. காதில் இருந்து வந்தால் அதன் பெயர் மெழுகு. மூக்கில் இருந்து வந்தால் அதன் பெயர் குறுணி. கண்களில் இருந்து வந்தால் அதன் பெயர் ஊளை. இவ்வாறு பல பெயர்கள் உள்ளன.
வயிற்றில் இருந்து பஞ்சு போன்ற அழுக்கு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் இது நடுத்தர வயதுள்ள ஆண்களுக்கும் தொப்புளை சுற்றி முடி உள்ளவர்களுக்கும் இது வரும் என ஆய்வுகள் மூலம் தெரிகிறது. இந்த ஆய்வை எடுத்து தன்னார்வலர்கள் சிலரிடம் தொப்புளை சுற்றியுள்ள முடியை அகற்றுமாறு ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இவ்வாறு முடியை அகற்றுவதன் மூலம் பஞ்சு போன்ற கழிவுகள் சேர்வதை தடுக்கும் என நிரூபணம் ஆனது. தொப்புளைச் சுற்றியுள்ள முடியானது, நாம் அணியும் ஆடையின் உள்புறம் இருந்து சிறிய நார் இழைகளை இழுத்து தொப்புளில் சேர்க்கிறது. இவ்வாறு அவ்வப்போது இழைகள் தொப்புளில் சேகரிக்கப்படுவதால் அவரை நிரம்பி ஒரு கட்டத்தில் உருளையாக வெளியே வருகிறது.
இவ்வாறு தொப்புளில் இருந்து 503 பஞ்சு போன்ற கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் ஒவ்வொன்றும் ஒரு கிராம் அளவுக்கு கூட எடை இல்லாமல் இருந்தது. ஒவ்வொன்றும் 1.82 மில்லிகிராம் எடை கொண்டது ஆகும். 7.2 மில்லி கிராமுக்கு மேல் எடையும் இருந்தது. அவற்றில் மிகப் பெரியது 9.17 மில்லிகிராம் கொண்டது.
சட்டையின் நிறத்தில்தான் அந்த பஞ்சு கழிவுகளும் இருந்தது. பழைய சட்டைகளை அணிந்தால் அந்த பஞ்சு போன்ற அழுக்கு உருவாவது குறைவாக இருந்தது. புதிய ஆடைகளில்தான் நிறைய அழுக்கு உருவானது. தொப்புளை சுற்றியுள்ள முடிகளின் முனைகளில் ஒருவித கொக்கிகள் இருக்கும். அவற்றின் மூலம் துணிகளின் நார்களை உள்ளே உறிஞ்சப்படுகின்றன.
இந்த பஞ்சு போன்ற அழுக்கு துணிகளின் நார்களால் மட்டுமல்லாமல் கொழுப்பு, வியர்வை, இறந்த செல்கள், தூசிகளால் ஆனது என்றும் கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பார்கர், என்பவர் 1984 ஆம் ஆண்டு முதல் தனது தொப்புள் பஞ்சுகளை பக்குவமாக சேகரித்து கண்ணாடி ஜார்களில் அடைத்து பாதுகாத்து வருகிறார். அதிக பஞ்சுகளை சேகரித்ததாக அவருக்கு 2010ஆம் ஆண்டு கின்னஸ் சாதனையில் பட்டம் கொடுக்கப்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications