Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயசு வெறும் 19.. முதியவர்களுக்கு ஏற்படும் மோசமான நோய்! இது எப்படி.. பார்த்து மிரளும் மருத்துவர்கள்

இளம் வயதிலேயே 19 வயது இளைஞருக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுவாக முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் அல்சைமர் நோய்ப் பாதிப்பு வெறும் 19 வயதே ஆன இளைஞருக்குக் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தளவுக்குக் குறைந்த வயதான நபர் ஒருவருக்கு இந்த நோய் ஏற்படுவது இதுவே முதல்முறையாகும்.

நம்மை மிகவும் கஷ்டப்படுத்தும் நோய்ப் பாதிப்புகளில் ஒன்றாக அல்சைமர் கருதப்படுகிறது. ஓகே கண்மணி திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் மனைவி கதாப்பாத்திற்கு ஏற்பட்டிருக்கும் அதே பாதிப்பு தான் இது.

அல்சைமர் பாதிப்பு என்பது மன ரீதியாகவும் நமக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்த பாதிப்பு இப்போது ஒரு இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது ஷாக் தருவதாக உள்ளது.

 சீனா இளைஞர்

சீனா இளைஞர்

சீனாவைச் சேர்ந்த 19 வயது இளைஞனுக்கு அல்சைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இந்த வயதில் அல்சைமர் ஒருவருக்கு கண்டறியப்படுவது இதுவே முதல்முறை.. இதன் மூலம் உலகிலேயே மிகவும் இளைய நோயாளியாக இவர் மாறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவாற்றல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு பெய்ஜிங்கில் உள்ள கேபிடல் மருத்துவ பல்கலைக்கழகம் பல்வேறு சோதனைகளை நடத்தியது. இதில் தான் பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோய் இந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

 குறுகிய கால நினைவாற்றல் இழப்பு

குறுகிய கால நினைவாற்றல் இழப்பு

அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அல்சைமர் பாதிப்பு குறித்த தகவல்கள் பிரபல மருத்துவ ஆய்விதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்த நபருக்குப் பள்ளி காலத்திலேயே படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து குறுகிய கால நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமாகி, அவன் வீட்டுப்பாடத்தை மறக்கத் தொடங்கியுள்ளான். ஒரு கட்டத்தில் சாப்பிட்டுமோ இல்லையா என்பதையே மறக்கத் தொடங்கியுள்ளான். இதனால் வேறு வழியில்லாமல் பள்ளியில் இருந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 அல்சைமர்

அல்சைமர்

இதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்றார். சின்ன வயது என்பதால் அவருக்கு அல்சைமர் ஏற்பட்டிருக்கும் என முதலில் யாருமே நினைக்கவில்லை. பல கட்ட நினைவாற்றல் சோதனைக்குப் பின்னரே அவருக்கு அல்சைமர் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இவ்வளவு இளம் வயதில் ஏன் மூளையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டது என்பது ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை. மருத்துவத் துறையில் நம் இந்தளவுக்கு வளர்ந்துவிட்ட போதிலும், அல்சைமர் ஏன் ஏற்படுகிறது என இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

 என்ன காரணம்

என்ன காரணம்

இருப்பினும், இந்த நோய்க்கு மூளையில் பீட்டா-அமிலாய்டு மற்றும் டவ் ஆகிய இரண்டு புரதங்களின் உருவாக்கம் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அல்சைமர் நோயாளிகளுக்கு மூளை செல்களுக்கு வெளியே பீட்டா-அமிலாய்டுகளும் நியூரான்களின் ப்ரொஜெக்ஷன்குள் டவும் இருக்கும். இப்போது இளம் அல்சைமர் நோயாளியாகக் கருதப்படும் 19 வயது சிறுவனின் மூளையில் இந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளை இல்லை என்றாலும், அவனது செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் அதிக அளவு புரதம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது தொடக்க நிலை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

 என்ன நடக்கும்

என்ன நடக்கும்

அல்சைமர் என்பது மூளையில் ஏற்படும் ஒரு பாதிப்பு. இந்த நோய் ஏற்பட்டால்.. மூளை சுருங்கி இறுதியில் மூளை செல்கள் இறந்துவிடும். இந்த நோயால் பாதிக்கப்படுவோர் இறுதியில் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். நினைவாற்றல், சிந்தனை என அனைத்தும் படிப்படியாகக் குறையும். டிமென்ஷியாவுக்கும் அல்சைமர் தான் முக்கிய காரணம். இது ஒரு நபரின் செயல்படும் திறனையும் பாதிக்கின்றன. இந்த பாதிப்பு ஏற்படும் பெரும்பாலானோர் 60 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

 அல்சைமர் அறிகுறிகள்

அல்சைமர் அறிகுறிகள்

இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று.. சமீபத்திய நிகழ்வுகள், உரையாடல்கள் எனப் பல விஷயங்களை மறக்கத் தொடங்கும். காலப்போக்கில், அல்சைமர் தீவிர நினைவாற்றல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன விஷயத்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.. பொருட்களை வைக்கும் இடத்தை மறந்துவிடுவார்கள். பழக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றாலும் வழியை மறந்துவிடுவார்கள். நோய் அதிகமாகும் போது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையே மறந்து விடுங்கள்
பேசிக் கொண்டே இருக்கும் போது, வார்த்தைகளைக் கூட மறந்துவிடுவார்கள்.

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+