Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூனை பிராண்டினால் "அது" பரவும்.. உயிருக்கு உலை வைக்கும்.. "இந்த" விலங்குகளிடம் உஷார்! டாக்டர் பரூக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூனை பிராண்டினால் ரேபிஸ் வைரஸ் பரவுமா, எந்தெந்த விலங்குகள் கடித்தால் நாம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் எனக்கு நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. "தோட்டத்தில் வேலை செய்யும் போது பூனை நகத்தால் பராண்டி விட்டது. காயமாகி ரத்தம் வருகிறது. என்ன செய்ய வேண்டும் ?" என்று கேட்டார்.

Dr Farook Abdulla says about Rabies virus and how it spreads?

"கைல ஸ்மார்ட் போன் இருந்தா.. பராண்டிய இடத்த ஒரு ஃபோட்டோ புடிங்க.. அடுத்து பராண்டிய இடத்தை 15 நிமிடங்கள் முழுமையாக பொறுமையாக குழாய் நீரைத் திறந்து விட்டு அந்த ஓடும் நீரில் கடிபட்ட இடத்தை சோப் போட்டு நன்றாக தேய்த்து கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்" "15 நிமிடமும் கழுவணுமா?""ஆமாங்க. 15 நிமிசம் சோப் போட்டு ரன்னிங் டேப் வாட்டர்ல கழுவணும்.

குழந்தைகள் பெரியவர்களுக்கு இன்னொருவர் காயத்தை கழுவி விடும் நிலை வந்தால் கிளவுஸ் மாட்டிக்கிட்டு கழுவுறது நல்லது. காரணம் - கடிபட்ட இடத்தில் வைரஸ் இருந்தால் அது கழுவிவிடுபவர் கைகளில் புண் இருப்பின் தொற்றிக் கொள்ள வாய்ப்புண்டு" "போட்டோ எதுக்குங்க?""இது மாதிரி விலங்குகள் நம்ம கடிக்கும் போது முதல்ல செய்ய வேண்டியது நல்லா சோப் போட்டு 15 நிமிசம் கழுவுறது தான். ஆனாலும் ரேபிஸ் தடுப்பூசி மட்டும் போதுமா கூடவே இம்யூனோ குளோபுளின் போடணுமா அப்டினு மருத்துவர் வகைப்படுத்த
கடிபட்ட / பராண்டப்பட்ட இடத்துல ஏற்பட்ட காயத்தின் தன்மை அதுல ரத்தம் வந்துச்சா? இல்லையா? போன்றவை முக்கியம்.

எனவே கழுவுறதுக்கு முன்னாடி தெளிவா ஒரு போட்டோ எடுக்குறது நல்லது. போட்டோ எடுக்க முடியாட்டியும் அதனால பிரச்சனை இல்ல" "சரி காயம்பட்ட இடத்த கழுவியாச்சு அடுத்து என்ன செய்யணும்?" "நேரா பக்கத்துல இருக்குற அரசு மருத்துவமனையை நாடி
ஒரு டெடானஸ் ஷாட் ( ஊசி) போடணும். அதுக்கடுத்த படியா பூனை பராண்டி ரத்தம் வந்ததா இல்லையா?"
"நல்லா பராண்டி ரத்தம் வந்துருக்கு" "அப்ப இது கேடகரி 3 ல வரும். கண்டிப்பா ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசியும் கூடவே இம்யூனோ குளோபுளின் ஊசி போடணும்"

"என்னங்க நாய் கடிச்சா தான ரேபிஸ் ஊசி போடணும்பாங்க.. பூனைக்கும் போடணும்னு சொல்றீங்க?""ரேபிஸ் உண்டாக்குற வைரஸ்
நாய்கள்ல மட்டுமில்ல.. பூனை, குரங்கு, பசு, எருமை, பன்றி, கீரி, நரி, ஓநாய், வெள்ளாடு, செம்மறி ஆடு, கரடி , கழுதை, குதிரை , ஒட்டகம், புள்ளி மான்... இது ஏன் அணில் கடிச்சு கூட இந்தியால ஒரு ரேபிஸ் கேஸ் ரிப்போர்ட் ஆகிருக்கு" "என்ன கிட்டத்தட்ட எல்லா விலங்குகளையும் சொல்லிட்டீங்க.. எந்த விலங்கு கடிச்சா ரேபிஸ் ஊசி தேவையில்லை அத சொல்லுங்க?"

" சுண்டெலி , முயல் போன்ற கொரிப்பான்கள், பறவைகள் , வவ்வால் இனம் போன்றவற்றில் ரேபிஸ் பரவுவதில்லை. எனினும் வனங்களுக்குள் பயணமாகும் போது எந்த விலங்கு பறவையிடம் கடியோ பராண்டுதலோ ஏற்பட்டால் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது" "என்னமோ கேடகரினு கடிய வச்சு வகைப்படுத்துறீங்களே அது என்ன?" "ஓ அதுவா
விலங்குகள தொடுவது, உணவு கொடுப்பது , விலங்குகள் நமது காயம் இல்லாத புண் இல்லாத ஆரோக்கியமான தோலில் நக்குவது, விலங்கின் ரத்தமோ, சளியோ, மலமோ, சிறுநீரோ, எச்சிலோ புண்/காயம் இல்லாத தோலில் படுவது போன்றவை கேடகரி - ஒன்று. இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.

தோலில் லேசான ரத்தம் வராத அளவு பராண்டல்கள் இருப்பின் அது இரண்டாவது கேடகரி. இதற்கு காயத்தை நன்றாக கழுவுவது கூடவே ரேபிஸ் தடுப்பூசி ( ( கடித்த அன்று 0, 3வது நாள், 7வது நாள், 28வது நாள் என்ற நான்கு தடவை வலப்பக்க இடப்பக்க தோளில் என்று ஒவ்வொரு முறையும் இரண்டு ஊசி ) போடணும்.

மூன்றாவது வகை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ரத்தம் வெளியேறும் அளவு பராண்டல்கள் / கடித்த இடங்கள் விலங்கின் எச்சில் / சிறுநீர் போன்றவை காயமுற்ற தோலில் படுவது, விலங்கின் திரவங்கள் கண்களிலோ வாயிலோ படுவது காயமுற்ற தோலில் விலங்குகள் நக்குவது கேடகரி 3 ஆகும். காயத்தைக் கழுவுவது , ஆண்டிசெப்டிக் களிம்பு பூசுவது இத்துடன் ரேபிஸ் தடுப்பூசி ( நான்கு நாட்கள் - ஒவ்வொரு முறையும் இரண்டு தோலிலும் ஒரு ஊசி). கூடவே கேடகரி 3 கடியாக இருந்தால் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி கடிபட்ட ஏழு நாட்களுக்குள் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக கடித்த இடத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் "

"இந்த ரேபிஸ் நோய் ஊசி போடலனா என்ன ஆகும்?" "நம்மை கடித்த அல்லது பராண்டுன விலங்குக்கு ரேபிஸ் தொற்று இருந்தா அது நமக்கு பரவி இருக்கும். அதனால நமக்கும் ரேபிஸ் நோய் வந்து... 100% மரணத்துல கொண்டு போய் விட்ரும். இந்தியாவில விலங்குகள் கிட்ட ரேபிஸ் வைரஸ் மிக அதிகமான அளவுல காணப்படுது. அதனால கடிச்ச விலங்குக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் சரி போடப்படாம விட்டிருந்தாலும் சரி. கடிபட்ட நாம கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்குறது நம்ம உயிருக்கு நல்லது"

"ரேபிஸ் நோய் வந்த யாரையும் காப்பாத்த முடியாதா?" "ஆமா ரேபிஸ் நோயோட அறிகுறிகள் அந்த வைரஸ் மூளைக்கு போய் சேர்ந்த உடனே தான் ஆரம்பிக்குது. அதனால் அறிகுறிகள் தோன்றிவிட்ட பிறகு யாரையும் காப்பாத்த முடியாது. அந்த வைரஸ்க்கு எதிரான வைரஸ் கொல்லி மருந்தும் கண்டறியப்படவில்லை. எனவே விலங்கிடம் கடிபட்டாலோ பராண்டுதல்கள் பட்டாலோ ரேபிஸ் தடுப்பூசி/ ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி போட்டுக்கொண்டு நம்மைக் காத்துக் கொள்வது சிறந்தது. ரேபிஸ் தடுப்பூசியால் தடுத்துக் கொள்ளக் கூடிய நோயாக இருக்கிறது.

எனவே இது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை" "இப்ப சொன்னதெல்லாம் ஒரு போஸ்ட்டா போட்டீங்கனா எல்லாருக்கும பயனுள்ளதா இருக்கும்" "சரி அப்படியே பண்றேன்." "கடைசியா ஒரு கேள்வி.. நாய்கடிச்சா நான்வெஜ் சாப்டக்கூடாது பத்தியமா இருக்கணும்னு சொல்றாங்களே. அது உண்மையா?" "அதெல்லாம் உண்மை இல்லை. நாய் போன்ற விலங்குகள் கடிச்சா முறையா ரேபிஸ் ஊசி போட்டுக்கிட்டா போதும். எந்த பத்தியமும் கிடையாது."

நாய்க்கடி , பூனைக்கடி மட்டுமல்ல மேற்கூறிய விலங்குகள் கடித்தாலும் அதற்குரிய ரேபிஸ் தடுப்பூசி தேவை என்பதை உணர்ந்து உடனே செயல்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+