சென்னையில் ஐடி வேலை ரெடி.. நாளை மறுநாள் இண்டர்வியூ போகலாமா? சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நாளை மறுநாள் (ஜூலை 18) ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. டாட் நெட் பணிக்கு இந்த இண்டர்வியூவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் டாட் நெட் டெவலப்பர் (Dot Net Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.

அதன்படி C#, .NET Framework/.NET Core (.NET 6/7/8) உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ASP.NET MVC, ASP.NET Core,Web API, REST Services உள்ளிட்டவற்றிலும் அனுபவம் இருக்க வேண்டும்.
SQL Server, டேட்டாபேஸ் டிசைன், ஸ்டோர்ட் புரோசிடர்ஸ், குவாரி ஆப்டிமைசேஷன் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் Entity Framework/Entity Framework Core உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ்3, ஜாவா ஸ்கிரிப்ட், ஜேகுவரி மற்றும் ஃப்ரண்ட்எண்ட் ஃப்ரேம்வொர்க்ஸ்களான (Angular/React Preferred) தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர Git, Azure DevOps, CI/CD Pipelines உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 5 + ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சம்பளம் பற்றி தற்போதைய அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவிற்கான லோகேஷன் பற்றி தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 18 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ செல்வோர் ரெஸ்யூம், அரசு வழங்கிய அடையாள அட்டையான பான் கார்டு/ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் டிசிஎஸ் சென்னை ஒன்- அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications