அறுசுவை மருத்துவம்! கரும்பு சாப்பிட்டால் வாயில் ஏன் புண் ஏற்படுது? தாய்ப்பால் என்ன சுவை தெரியுமா?
சென்னை: கரும்பு அதிகமாக சாப்பிட்டால் வாயில் புண் ஏற்படுவது ஏன் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறையின் மருத்துவர் டாக்டர் ஒய்.தீபா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இன்று நாம் பார்க்க போகும் டாபிக் சுவை மருத்துவம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய 6 சுவைகள் உள்ளது. இவை ஆறிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த சுவைகளில் எது அதிகமானாலும் எது குறைந்தாலும் நமக்கு நோய் என்பது வரும். ஒவ்வொரு சுவைகளுக்கும் மருத்துவ குணம் இருக்கிறது. நமது தசைகளை வலுவடையச் செய்யவும் வளர்ச்சியடையச் செய்யவும் அதிகமாக இனிப்பும், புளிப்பும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதே ரத்த ஓட்டம் அதிகமாக வேண்டும், ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்றால் துவர்ப்பு சுவையை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். நம்முடைய எலும்புகளை வலிமைப்படுத்த உவர்ப்பு சுவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.நரம்பை வலுப்படுத்த கசப்பு சுவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜீரண சக்தியை அதிகமாக்க காரம் சேர்த்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் இருப்போருக்கு சத்தான உணவுகளை கொடுக்கிறோமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நாம் எனர்ஜிட்டிக்காக இருக்கிறோம் என்றால் நம் உடலில் இனிப்பு சுவை அதிகமாக இருக்கிறது என்பது அர்த்தம். ஒவ்வொரு சுவையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கூட்டியோ குறைத்தோ எடுக்கும் போது செயல்பாட்டில் பிரச்சினையை கொடுக்கும். புளிப்பு சுவை அதிகரித்தால் தசைகளில் தேய்மானம் ஏற்படும். உடலில் அதிக கொழுப்பு தங்குவதற்கு இது காரணமாகவே இருக்கும்.
மாவுச் சத்து, எண்ணெய் பொருட்கள் ஆகியவை புளிப்புச் சுவையில்தான் வரும். குழந்தைகள் எடைக் குறைவாக இருந்தால் புளிப்புச் சுவையுடைய உணவுகளை நாம் கொடுக்கும் போது அவர்களுக்கு பசியேற்பட்டு அதிகம் சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாறு குடித்தால் நன்றாக சாப்பிடுவார்கள். அந்த எலுமிச்சை சாறில் புதினா போட்டு கொடுத்தாலும் பசி எடுக்கும்.
நாம் சாப்பிடும் உணவில் 60 சதவீதம் புளிப்பு சுவைதான் இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் தலா 10 சதவீதம் இருந்தால் போதுமானது. அந்தந்த காலநிலைக்கேற்ப இந்த சுவைகளின் விகிதம் மாறுபடும். கார்போஹைட்ரேட் என சொல்லப்படும் மாவு சத்த மூட்டுவாதத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் கசப்பு சுவை இருக்கிறது. ஆனால் அந்த எண்ணெய்யை ரீஃபைண்ட் செய்யும் போது அந்த கசப்பு சுவை நீக்கப்படுகிறது.
நாட்டு சர்க்கரை, கரும்பு, பனங்கற்கண்டு, பழங்கள், தேன், சில தானியங்கள், கிழங்குகள் ஆகியவற்றில் இனிப்புச் சுவை இருக்கிறது. இனிப்புச் சுவையை அதிகமாக சாப்பிடும் போது அல்சர் வரும். கரும்பு நிறைய சாப்பிட்டால் வாயில் புண் ஏற்படுவதை நாம் பார்த்துள்ளோம். விறுவிறுப்பையும் ஏற்படுத்தும். அதிக இனிப்பு சுவை உடல் சூட்டை தணித்து கபத்தை அதிகரிக்கும். இதனால் சளி ஏற்படும். உடல் எடை அதிகரிக்கும்.

துவர்ப்பு சுவை- குறையும் போது வயிற்று பிரச்சினை, அஜீரண பிரச்சினை, கேஸ்டிரிக் பிரச்சினை, அல்சரை கொடுக்கும். வெந்தயம் துவர்ப்பு சுவை. மாதுளை பழம், பெரிய நெல்லிக்காய், வாழைப்பூ, தேங்காய் பால், கறிவேப்பிலை, அத்திப்பழம், கடுக்காய் ஆகியவை வயிற்று புண்ணை ஆற்றும். பால் வடிய கூடிய காய், பழங்கள், தாய்ப்பாலும், பசும்பால் சுவர்ப்புதான். இரும்பு சத்தை அதிகரிப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மாதவிடாய் பிரச்சினைகளையும் தீர்க்கும். புளிப்பு சுவையை நிறைய சாப்பிட்டாலும் துவர்ப்பு சுவை குறைந்துவிடும்.
கசப்பு சுவை என்றால் வெந்தயம், பாகற்காய், தனியா, அவரைக்காய், கத்திரிக்காய், சுண்டக்காய். உணவு பொருட்களில் எதில் வாசனை அதிகமாக இருக்கிறதோ அவையெல்லாம் கசப்பு சுவையில் வரும். சோம்பு, பட்டை , லவங்கம், ஏலக்காய் ஆகியவை கசப்பு சுவையுடையவை. இந்த சுவையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஜீரணத்தை அதிகரிக்கிறது, நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மூளையை தூண்டுகிறது. எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும்.
மூச்சுப்பயிற்சியை செய்யும் போது கசப்பு சுவை அதிகரிக்கும். சூரிய வெளிச்சத்தில் நின்று விட்டமின் டி உற்பத்தி ஆவதும் நம் உடலில் கசப்பு சுவை உற்பத்தி ஆவதும் ஒன்றுதான். பயந்த சுபாவம், மன அழுத்தம் இருப்போர், பதற்றமான நிலையில் இருப்போர் ஆகியோருக்கு கசப்பு சுவையை அதிகமாக கொடுக்கும் போது அந்த பிரச்சினையிலிருந்து அவர்கள் வெளியே வருவார்கள்.
அடுத்தது உவர்ப்பு சுவை- நீர் காய்கறி, பழங்களில் தாது உப்புகள் இருக்கின்றன. அதனால் அவையெல்லாம் உவர்ப்பு சுவையுடையவை. இந்த சுவை எலும்பை வளர்க்கும். எலும்பு மஜ்ஜை சரியாக இயங்க நீர் காய்கறிகளும் பழங்களும் சேர்த்து கொள்ள வேண்டும், உவர்ப்பு சுவை நமது உஷ்ணத்தையும் குறைக்கும். இந்த சுவை அதிகமாகிவிட்டால் சளி ஏற்படும். இதனால் துவர்ப்பு சுவையையும் கார சுவையையும் எடுத்து சளியை குறைக்க வேண்டும்.
காரச் சுவை- மிளகாய், மிளகு, கீரை, வாழைத்தண்டு, பச்சை மிளகாய், கரம் மசாலா, நார்ச் சத்து உணவுகள் ஆகியவை காரச் சுவையில் வரும். காரச் சுவை சுரப்பிகளின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கும். இது குறைந்தால் அஜீரண தொந்தரவு ஏற்படும். வாதம், உடல் பருமன், ரத்த சோகை, சோம்பேறித்தனம், மலச்சிக்கல் ஆகியவை பொதுவாக பெரும்பாலானாருக்கு வரக் கூடிய பிரச்சினையாகும். இந்த சுவைகளை சரியான நேரத்திற்கு சரியான வேளைக்கு எடுத்துக் கொண்டால் உடல் உபாதைகளை தடுக்கலாம். இவ்வாறு ஒய். தீபா தெரிவித்துள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications