தினந்தோறும் ஏலக்காய் எத்தனை சாப்பிடலாம்? சருமம், நரம்பு பலம் பெற ஏலக்காய் டீ.. கேன்சர் அண்டாது
சென்னை: உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கும், அஜீரண கோளாறுகளுக்கும் ஏலக்காய் எப்படி பயன்படுகிறது தெரியுமா? ஏலக்காய்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன? ஒருநாளைக்கு ஏலக்காய் அதிகபட்சமாக எத்தனை சாப்பிடலாம்? உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகள் குறைய, ஏலக்காயை உணவில் எப்படி எடுத்துக் கொள்ளலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.ஆயுர்வேத மருத்துவத்தில், சிறுநீரக தொற்றுக்கு மிகச்சிறந்த மருந்தாக ஏலக்காய் திகழ்ந்து கொண்டிருக்கிறது.. நம்முடைய மனதை சமநிலைப்படுத்த உதவுக்கூடியது இந்த ஏலக்காய் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஏலக்காயில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் A, B, C, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும், புரோட்டீன் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், போன்றவையும் ஏலக்காயில் உள்ளன. அசைவ உணவு உட்பட பெரும்பாலான உணவுகளில் ஏலக்காய் சேர்ப்பதற்கு காரணம், செரிமான பிரச்சனையை ஏலக்காய் தீர்க்கக்கூடியது. இதனால் ஜீரணம் சீராவதுடன், வயிறு பொருமல், குமட்டல், வாந்தி போன்றைவையும் நின்றுவிடும்
சிலருக்கு உணவில சேர்த்தால் சாப்பிடுவதில்லை.. இதற்கு வெற்றிலையில், ஏலக்காயை வைத்து சுருட்டி வாயில் வைத்து மென்று தின்றால் போதும். இதனால், வாய் சுகாதாரம் பேணப்படும். தொண்டை புண்கள், விஷக்கடி இருந்தாலும் சரியாகிவிடும். ஏலக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.
சரும பாதுகாப்பு
இந்த விதையிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் சருமத்துக்கு நல்லது. உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் ஏலக்காய் மருந்தாகிறது. ஏலக்காயை வாயில் போட்டு மென்று வரும்போது, பற்கள், ஈறுகள் உறுதி பெறுகிறது.. ஒருவேளை வாயில் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், கல்உப்பு, 2 துளசி, 2 புதினா இலைகளுடன் 1 ஏலக்காய் வைத்து மென்று பல் துலக்கினால போதும். அவ்வளவு ஏன் நீண்ட காலமாக சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்டிருப்பவர்களையும் மீட்க, இந்த ஏலக்காய் உதவுகிறது.
உடலிலுள்ள இரத்தத்தை சுத்தமாக்கும் குணம் ஏலக்காய்க்கு உண்டு.. அத்துடன், கல்லீரலில் உள்ள அதிகப்படியான யூரியா, கால்சியம் போன்ற நச்சை வெளியேற்றுகிறது. கேன்சர் செல்களை எதிர்க்கக்கூடிய சேர்மங்கள் ஏலக்காயில் உள்ளன. ஏலக்காய் சாறு இரைப்பை புண்களின் அளவை 50% தடுப்பதாக சொல்கிறார்கள்.
பித்த வெடிப்பு
வாயு தொலையால் அவதிப்படுபவர்கள், இரவில் தூங்க செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.. பித்த வெடிப்பு இருந்தால், ஏலக்காயுடன் வேப்பிலை, மஞ்சள் கலந்து அரைத்து தடவினால் போதும்.டீ, காபி குடிக்காதவர்கள், வெறுமனே சுடுநீரில் ஏலக்காய் போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் இதில் தேன் கலந்து குடிக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள் டீ தயாரிக்கும்போது ஏலக்காய் சேர்த்து குடித்து வருவது நல்லது.. இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், இந்த ஏலக்காய் டீயில் சர்க்கரை பதிலாக தேன் சேர்த்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால், நரம்புகள் பலமாகும்.. உயர் ரத்த அழுத்த பாதிப்பும் குறையும்..
யார் யார் தவிர்க்கலாம்
டீ, காபி குடிக்காதவர்கள், வெறுமனே சுடுநீரில் ஏலக்காய் போட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் இதில் தேன் கலந்து குடிக்கலாம்.
நன்மைகள் பலவிருந்தாலும், ஏலக்காயை தினமும் எத்தனை சாப்பிடலாம்? தினமும் 3 ஏலக்காய் வரை சாப்பிடலாம். பச்சை ஏலக்காயை அப்படியே மென்று சாப்பிடலாம். ஆனால், கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஏலக்காயை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதேபோல கர்ப்பிணிகள் ஏலக்காயை தவிர்க்கலாம்.












Click it and Unblock the Notifications