இட்லிக்கு ஊற வெக்கறீங்களா? தோசை மாவில் சத்துக்கள் கிடைக்க இதுவும் சேருங்க.. பாக்கெட் மாவு ஆரோக்கியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இட்லி தோசை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் இட்லி எத்தனை சாப்பிடலாம்? பஞ்சு போல இட்லி வேண்டுமானால், டிப்ஸ் என்ன? பாக்கெட் மாவு நல்லதா? கெட்டதா? இதுகுறித்து சுருக்கமாக பார்ப்போம்.

ஆவியில் வேகக்கூடிய இட்லிகள், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு.. ஒரு இட்லியில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருப்பதால், ஆரோக்கியமான உணவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

idli batter dosa batter dosa idly flour

கலோரிகள் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும், உடல் எடையை சீராக வைத்திருப்போருக்கும் சிறந்த உணவாக இட்லியாக உள்ளது. புரோட்டீன், நார்ச்சத்து இட்லியில் அதிகம் என்பதால், பசி இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது.

கொழுப்புச்சத்து: அத்துடன், கொழுப்புச்சத்துக்களும் இட்லியில் இல்லை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது.. இட்லி சாப்பிடுவதால் தசைகள் வலிமையாகின்றன.. ரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.

வயிறு புண்கள்: மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தருகின்றன.. வாய்ப்புண், வயிற்று புண்களையும் ஆற்றி விடுகின்றன. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. உணவிலிருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவதற்கும் இட்லிகள் உதவி செய்கின்றன.

எனினும், அரிசிக்கு பதிலாக, சத்து நிறைந்த தானியங்கள் கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை சேர்த்து இட்லி மாவு அரைக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி பெஸ்ட் சாய்ஸ்.. எனினும் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால், இட்லிக்கு பதிலாக புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

பஞ்சு போன்ற இட்லி: பஞ்சு போல இட்லி வேண்டுமானால், 8 கப் அளவிற்கு ரேஷன் புழுங்கல் அரிசி, 4 கப் பச்சரிசியை, 1 கப் உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.. இவைகளை தனித்தனியாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.. உளுந்து, அரிசியை 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.. பிறகு உளுந்தை மட்டும் கிரைண்டரில் நுரை பொங்கும் அளவுக்கு அரைக்க வேண்டும். பிறகு இந்த உளுந்து மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அரிசியை அரைக்க வேண்டும். இந்த அரிசி மாவில், புதிதாக வடித்த சாதத்தையும் 2 கைப்பிடி சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது தேவையான அளவுக்கு எடுத்து ஒன்றாக கலந்து புளிக்க வைக்க விடவேண்டும். இப்ப புளிக்க வைத்து இட்லி சுடும்போது ஆரோக்கியமாகவும் மாறுகிறது.

பாக்கெட் மாவு: ஆனால், பாக்கெட் இட்லி மாவு தவிர்க்கலாம்.. நேரமின்மை காரணமாக, பலரால் பாக்கெட் மாவு பயன்படுத்த நேரிடுகிறது.. ஆனால், இந்த பாக்கெட் மாவில் புளிப்பு வாசனை வராமல் இருக்க, புண்ணுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் தடவப்படுகிறதாம்.. இதனை சாப்பிடும்போது வயிறு உபாதைகள் ஏற்பட்டுவிடும். குடல் ஆரோக்கியம் பாதித்து, வயிற்று வலி, வயிற்று உபாதைகள், அஜீரணம் ஏற்பட்டுவிடும்.

அதுமட்டுமல்லாமல், மாவு அரைக்கும்போது பயன்படுத்தப்படும் தண்ணீரின் ஆரோக்கியம் பற்றியும் உறுதியாக தெரியாது.. ஒருவேளை அசுத்தமான நீராக இருந்தால், ஈக்கோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிகளவில் ஏற்படும்.. இது இறுதியில் இரைப்பை நோய் வரை கொண்டுபோய் விட்டுவிடும் ஆபத்தும் உள்ளதாக தனியார் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாம்..

மரவள்ளிக்கிழங்கு: மேலும் அரிசி மாவில் உளுந்து குறைத்துக்கொண்டு மரவள்ளிக்கிழங்கின் கழிவுகளை அதிகம் பயன்படுத்துவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாம். அதுமட்டுமல்லாமல், மாவு புளித்து போகாமல் இருப்பதற்காக, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருளும் சேர்க்கப்படுகிறது.. இவைகளை சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் தடைபடுகிறது. உடலுக்கு பல நன்மைகளை தரும் வெந்தயத்தையும், அரிசியில் கலந்து பலரும் அரைப்பதில்லையாம்.

அதுவும் இல்லாமல், நீண்ட நேரத்துக்கு கிரைண்டர்களில் மாவு அரைக்கும்போது, ஆட்டுக்கல் சிறிது சிறிதாக தேய்ந்து மாவில் கலக்கிறது.. இந்த கற்களை நாம் மாவில் தெரியாமல் சாப்பிடும்போது, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்புள்ளது..

மாவு பாக்கெட்: எத்தனையோ பேர் வீடுகளில் சுத்தமான முறையில் மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறார்கள்.. எனினும், ஒருசிலர் லாப நோக்கத்துக்காக கெமிக்கல் சேர்ப்பதால், மாவு வாங்கும்போது கவனித்து வாங்க வேண்டும் என்று உணவு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+