சர்ன்னு சுகர் குறையணுமா.. இந்த 4 இலையை ட்ரை பண்ணுங்க.. அட்டகாச அமிர்தவல்லி.. அருமையான சிறுகுறிஞ்சான்
சென்னை: உண்ணும் உணவின் மூலமாகவே, சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிறார்கள்.. இதற்கு சில மூலிகைகளே நமக்கு இயற்கையாகவே கைகொடுத்து உதவுகின்றன. அந்தவகையில் 4 வகையான மூலிகை இலைகளை பார்ப்போம்.
சிறு குறிஞ்சான் இலைகளில், பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், பியூட்ரிக் அமிலம் போன்ற எண்ணற்ற பண்புகள் நிறைந்துள்ளன.. முக்கியமாக, இந்த மூலிகையில் ஜிம்னிமிக் அமிலம்தான், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது பல்வேறு ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை, கொழுப்பை உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், நீரிழிவு நோயாளிகள் வெறுமனே இந்த இலையை மென்று தின்னலாம். அல்லது டீ போட்டும் குடிக்கலாம்..
கடைகளில் மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.. இந்த இலைகளை பவுடர் செய்தும் நாட்டு மருந்து கடைகளில் விற்கிறார்கள்.. ஆனால், உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த சிறுகுறிஞ்சானை 3 முதல் 5 கிராம் வரை சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
சிறுகுறிஞ்சான்: இன்சுலின் போடும்போது, இந்த சிறுகுறிஞ்சானையும் சாப்பிட்டால் அதிக ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். அதனால், டாக்டரின் முறையான ஆலோசனை இல்லாமல், சிறுகுறிஞ்சானை உட்கொள்ளவே கூடாது.
அமிர்தவல்லி இலைகள் இதற்கு உதவுகின்றன.. நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ள உதவவே, இந்த இலைகள் பெரிதும் பயன்படுகின்றன.. இதன் இலைகளிலும், காம்பிலும் ஏகப்பட்ட ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. சீந்தில் இலை என்றும் சொல்வார்கள். பார்ப்பதற்கு இதய வடிவில் இருக்கும் கொடி வகையாகும்.
கழிவுகள்: உடலிலுள்ள கழிவுகளையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்ற இந்த இலைகள் உதவுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அமிர்தவல்லி, உடலில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.. இதனால், குடல் மட்டுமல்லாமல், ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்கிறது. இதய நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்காக இந்த அமிர்தவல்லியை பயன்படுத்துகிறார்கள்..
ஒரு ஸ்பூன் அமிர்தவல்லி இலை பொடியை, ஒரு கப் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன்பு ஊற வைத்துவிட்டு, காலை எழுந்ததும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்குமாம்.
நாவல் கொட்டைகள்: அதேபோல நாவல் இலைகள் மற்றும் நாவல் கொட்டைகளை சொல்லலாம். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இந்த நாவல் கொட்டைகள் உதவுகின்றன.. நீரிழிவு நோயாளிகளுக்கு, நாவல் பழங்களைவிட, இந்த கொட்டைகள்தான் நிறைய பலன்களை தருகின்றனவாம்.. இதுகுறித்து நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன..
அதாவது, நாவல் கொட்டை பவுடரை, சாப்பிட்டு வருபவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
பச்சை நிறம்: நீரிழிவு நோயாளிகள், இந்த கொட்டையை பதப்படுத்தி தூள் செய்து சாப்பிட்டு வரலாம்.. இந்த பழத்தின் கொட்டைகளை ஒரு வாரம் உலர்த்திவிட்டு, பிறகு, அதை இரண்டாக உடைத்து வெயிலில் காயவிட வேண்டும். இந்த கொட்டையினுள் காணப்படும் பச்சை நிறமும் காய்ந்தபிறகு, மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும். இதிடல், தினமும் 2 வேளை, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுக்குள் வருமாம்.
நித்திய கல்யாணி செடிகளும், நீரிழிவு நோய்க்கு பெரிதும் உதவுகின்றன.. ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலை செய்வதிலும் முக்கிய முகிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளை கழுவி அப்படியே மென்று சாப்பிடலாம்.. அல்லது 2 இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
டாக்டர் ஆலோசனை: இப்படி இயற்கையான மூலிகைகள், நீரிழிவு அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டவை என்றாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே, மருந்தாக உட்கொள்ள வேண்டும்..!!












Click it and Unblock the Notifications