"அரைஞாண் கயிறு".. அதென்ன இடுப்புல கருப்பா..உங்க கிட்ட "இது" ஒன்னு மட்டும் போதும்.. அதிசயத்தை பாருங்க
சென்னை: சில விஷயங்களை காரணமே தெரியாமல், காலம் முழுவதும் நாம் செய்து கொண்டிருப்போம்.. அதில் ஒன்றுதான், அரைஞாண் கயிறு கட்டுவது. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இதன் மருத்துவ பலன்கள் என்னென்ன தெரியுமா?
அரணாகொடி என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள்.. ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, பிறந்த சில நாட்களிலேயே இந்த அரைஞாண் கயிற்றை இடுப்பில் கட்டிவிடுவார்கள்...
ஆயிரம் அர்த்தங்கள்: ஆனால், இதற்கான காரணம் தெரியவில்லை.. எனினும், நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக நமக்கு தெரியும்.. இதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஆதிகாலத்தில், மனிதன், முழு ஆடையை அணிந்தது இல்லை.. கோவணத்தை மட்டுமே கட்டியிருக்கிறான்.. இதற்கு ஆதாரமாக இருந்தது அரைஞாண் கயிறுதான்... இடுப்பு பகுதியில் உள்ள எலும்பு பகுதிக்கு தூய தமிழில் "கூபக அறை" என்பார்கள்.. 'ஞாண்' என்றால் வளைத்து கட்டுவது என்பது பொருள்.. அதனால்தான், கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இந்த கயிறுக்கு 'அரைஞாண் கயிறு' என்று பெயர் வந்ததாம்.

பெயர்க்காரணம்: இன்னொரு பெயர்க்காரணமும் சொல்கிறார்கள்.. அரை என்பது, இடுப்பு வரையிலான பாதி உடலை குறிப்பது.. ஞான் என்பது- கயிறைக் குறிக்கும் சொல் ஆகும். அதனால், இரண்டையும் இணைத்தே அரைஞாண் என்று பெயர் வந்ததாம்..
அதேபோல, வேட்டையாடுவதற்கான மனிதன் காட்டுக்கு போகும்போது, வேட்டை கருவிகளை வைப்பதற்காகவும், இந்த அரைஞாண் கயிற்றினை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பச்சை கலர்: அன்றைய காலங்கள் இனக்குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள்.. இந்த வேறுபாடு தெரிவதற்காகவே, கறுப்பு, சிவப்பு, பச்சை என கலர்களில் கயிறுகளை கட்டி வந்துள்ளனர்.. ஆரம்பத்தில் வெறும் வெள்ளை கயிறுகளில் கட்டி உள்ளனர்.. பிறகுதான் கலர் கலராக கயிறுகளை கட்ட துவங்கி உள்ளனர்.. இதற்கு பிறகு, குலதெய்வத்தை வணங்குபவர்கள் கறுப்பு கயிறும், வைணவத்தை பின்பற்றுபவர்கள் சிவப்பு கயிறு என மனிதர்கள் அடையாளம் வைத்து கொண்டனர்.
வெப்ப மண்டல நாடு: கருப்பு நிற கயிறு, துஷ்ட சத்தி மற்றும் எதிர்மறை சக்திகளை அண்ட விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, சிவப்பு கயிறு அணிவதுதான் சிறந்ததாம். இதற்கு காரணம், நாம் இருப்பது வெப்ப மண்டல நாடு.. அதிக வெப்பம் நம்மை நேரடியாகவே தாக்கும்.. அதனால், கறுப்பு வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என்பதால், சிவப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவது சிறந்தது என்கிறார்கள்.
வசதியாக இருப்பவர்கள், தங்கம், வெள்ளி என அணிந்துகொள்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் உண்டு.. உடல் சூட்டை தணிக்கும் சக்தி உலோகத்துக்கு மட்டுமே உண்டு.. வெறும் நூலுக்கு கிடையாது.. இதுஒருபுறம் இருந்தாலும், மருத்துவக்காரணங்களும் இதில் ஒளிந்துகொண்டுள்ளன.
சிறுநீரக பாதிப்பு: ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான்... இந்த அரைஞாண் கயிற்றை, இடுப்பை சுற்றி கட்டும்போது, மேல்வயிற்று பகுதியிலுள்ள குடல் கீழே இறங்காமல் இருக்குமாம்,..
அதாவது, அந்த காலத்தில் கடின வேலைகளைதான் மனிதன் செய்திருக்கிறான்.. மரம் ஏறுவது, குதிப்பது, மலைகளில் ஏறுவது, இப்படி எந்த வேலைகளை செய்தாலும், விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம்.. எனவே, விதைப் பையை பாதுகாக்கவும், வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும், இந்த அரைஞாண்கயிறுகளை கட்டி வந்திருக்கிறார்கள்.. இதனால், சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
இப்படி இடுப்பில் கட்டுவதால் ஆண்மை கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது.. சிறுநீரக பிரச்சைகளையும் ஏற்படாமல் தடுக்கிறது என்பதுடன், உள்ளுறுப்புகளை பாதுகாப்பதற்கு கவசமாக இருப்பதே இந்த அரைஞாண் கயிறுதான்..
ஹெர்ணியா: அதீத உடை எடையுள்ள அல்லது அதிக பளு சுமக்கும் பணிகளை செய்பவர்களுக்கு இந்த குடல் இறக்க நோய் எளிதில் வரும். இதை எப்போதும் இடுப்பில் கட்டி இருப்பதால், ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் வெகு விரைவாக வராது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த குடல் கீழிறக்கம் பிரச்னையானது, பெண்களுக்கு வருவதைவிட ஆண்களுக்கு வரவாய்ப்பு இருப்பதால் ஆண்களுக்கு எல்லா வயதிலும் இதனை அணிய சொல்கிறார்கள்.
அரைஞாண் கயிற்றை கட்டாவிட்டால், விரைவாதம், அண்டவாதம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. அதனால்தான், எவ்வளவுதான் நவீனத்துவம் வளர்ந்தாலும்கூட, பண்டைய வாழ்வியலோடு தொடர்புடைய இந்த "கயிறு", இன்றைய காலம்வரை இறுக்கிப்பிடித்து கொண்டிருக்கிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications