குடம்புளி! குடல் பிரச்சினை முதல் உடல் எடையை குறைப்பது வரை! ஆல் கிளியர் செய்யும் மலபார் புளி
சென்னை: குடம்புளி அல்லது கோக்கம்புளி அல்லது மலபார் புளியின் உடல்நல குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். நாம் சமையலில் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக இந்த புளியை பயன்டுத்தலாம்.
தற்போது நாம் பயன்படுத்தி வரும் புளியை சில 100 ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் குடம்புளிதான் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காக செடிகள் உள்ளன.

இந்த புளி பார்ப்பதற்கு பூசணிக்காய் வடிவத்தில் இருக்கும். இது பழமானால் அதை காய வைத்து பயன்படுத்துகிறார்கள். இந்த புளியஞ்செடி கேரளாவில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்கும். இந்த புளி சுவையோடும் துவர்ப்பு சுவையும் இருக்கும்.
குடம்புளி நம் உடல் எடையை குறைக்கிறது. உடல் எடை குறைய விரும்புவர்கள் சிறிய நெல்லிக்காய் அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறிவிட வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிடவும். பிறகு அதை ஆற வைத்து மூன்றாக பிரித்து உணவுக்கு முன்பு மூன்று வேளையும் குடித்து வருகிறார்கள்.
அதிக அளவு வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த குடம்புளியால் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணம், அமிலத் தன்மை, இரைப்பை போன்ற பிரச்சினைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அஜீரணக் கோளாறு கொண்டிருப்பவர்கள் குடம்புளியை தினசரி உணவில் சேர்த்து வந்தால் பலன் கிடைக்கும்.
குடல் அறிகுறிகளைக் கூட இந்த குடம்புளி கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை தடுக்கும். மலத்தை இளக்கி வெளியேற்றுகிறது. மேலும் வயிற்றுப்போக்கின் அதிர்வெண்ணை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மலச்சிக்கல் இருந்தால் குடம்புளியில் கூழ் செய்து குடித்து வர வேண்டும்.
நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை இந்த குடம்புளிக்கு உண்டு. குடம்புளி சாறு குடிப்பது புற்றுநோயை கூட விரட்டும். கோடை காலங்களில் உடல் சூட்டை தணிக்க இந்த குடம்புளி பானத்தை குடிக்கலாம். குடம்புளியில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. கர்ப்பகாலத்தில் தாய், குழந்தையின் ஊட்டச்சத்துக்கு இவை உதவுகின்றன.
சருமத்தில் வயதான தோற்றத்தை மறைத்து என்றும் இளமையாகவே வைத்துக் கொள்ளும். முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். சொறி, படை அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் குடம்புளி சிறந்தது.
இந்த குடம்புளியை சமையலில் பயன்படுத்த வேண்டும். இது நாம் பயன்படுத்தும் புளியை போல் கரையாது. இதனால் இந்த புளியை நன்கு நிறைய முறை கழுவி வெந்நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications