வாத நோய்களை முடக்கி போடும் வாதநாராயணன் கீரை.. ருமாட்டிக் ஆர்த்ரைட்டிஸுக்கு சிறப்பான சீந்தல் இலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனைக்கு என்ன காரணம்? முடக்குவாதம் தீவிரத்வாத நோய் இருப்பவர்கள், உப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமாம். அத்துடன், நார்ச்சத்து உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும் என்கிறார்கள்.

உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் பயங்கரமான நோய்தான் ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம். நடுத்தர வயது மற்றும் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும் என்கிறார்கள்..

rheumatoid arthritis vadha narayanan keerai rheumatism

மூட்டுகள் வலி: நரம்பு செல்களில் கெட்ட நீர் தங்கி, தசைகளில் ஊறி, வாயு அதிகரித்து வரும் நோயே வாத நோயாகும். இந்த வாத நோய் தாக்கும் இடங்களை பொறுத்து அது வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.. மூட்டுகளை தாக்கினால் மூட்டு வாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகவாதம் என்றும் அழைக்கப்படுகிறது..

மனித இயக்கங்களை முற்றிலும் முடக்கிவிடுவதுதான் முடக்குவாதம் எனப்படும். மொத்தம் 80 வகையான வாதங்கள் இருந்தாலும், மனிதர்களை அதிகமாக தாக்குவது முடக்கு வாதம், பக்கவாதம் தான். வாத நோய்களிலேயே மூட்டுகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறதாம்..

கணுக்கால் பாதிப்பு: இந்த பாதிப்புகள் ஏற்பட்டால், கை, கால் மூட்டுகளில் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும்... மணிப் பந்து மூட்டுகள், விரல்கள், கணுக்கால், முழங்கால்களில் நீர் சேர்ந்துவிடும்.. நாளடைவில் மூட்டுகளில் பாதிப்பு, வலி ஏற்பட்டு, கை, கால்களை நீட்ட, மடக்க முடியாத நிலைமை வந்துவிடும்.

அதுமட்டுமல்ல, மூட்டுகளை அசைக்கவோ, நீட்டவோ முடியாது. இதனால் நுரையீரலும் பாதிக்கப்படலாம். நவீன மருத்துவத்தில் இதற்கான பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. எனவே, மருத்துவர்களை சந்தித்து, இதற்கு முறையான சிகிச்சையை உடனடியாக பெற வேண்டும்.

அதேசமயம் முடக்குவாதத்தின் தீவிரத்தை குறைக்கக்கூடிய உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். அந்தவகையில், 3 வகையான கீரைகள் உதவுகின்றன.. முதலில் சீந்தில் கொடி... இதன் தண்டை தண்ணீரில் ஊறவைத்து, இடித்து பிழிந்து சாறு எடுத்து குடித்து வந்தால், வாதம் கட்டுப்படும். சீந்திலின் இலையை அரைத்துப் பற்று போடலாம்.

முடக்குவாதம்: அதேபோல, ஆர்த்தரைடிஸ், முடக்குவாதம் பிரச்சினை உள்ளவர்கள், முள்ளங்கி இலையை உணவில் தாராளமாக சேர்கக வேண்டும்.. இதனால், மூட்டுவலி, மூட்டு எலும்புகளில் ஏற்படும் தொற்றுக்களையும் இந்த இலைகள் சரிசெய்துவிடும்.. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இந்த இலைகள் குறைத்துவிடும்.

முருங்கை கீரையை போலவே, முருங்கை பட்டைகளும் வாதத்துக்கு நல்லது.. நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டைகளை காயவைத்து பவுடர் செய்து பயன்படுத்தலாம்.. இந்த முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து விழுதாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்றுபோட்டு வந்தால் வலி குறையும்.

வாதநாராயணன்: வாதநாராயணன் இலைகளையும் வாதத்துக்கு பயன்படுத்தலாம்.. இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்து சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும் என்கிறார்கள்.. பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டாலும் மூட்டு வலி குறையும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+