பட்ஜெட்டில் தாமரை விதைகளுக்கு வாரியம்! அப்படி மக்கானாவில் என்னதான் இருக்கு?
சென்னை: தாமரை விதைகள், மக்கானா என சொல்லப்படும் உணவு பொருளுக்கென ஒரு வாரியத்தை பீகாரில் அமைப்போம் என மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டது முதலே மக்கள் தாமரை விதைகள் குறித்து இணையதளத்தில் தேடி வருகிறார்கள்.
மக்கானா விதைகள் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். தாமரையில் உள்ள வெள்ளை நிறத்திலான உண்ணக் கூடிய விதைத்தான் மக்கானா (மகானா) எனப்படும். இதில் உள்ள நார்ச்சத்து எடைக் குறைப்பிற்கு உதவுகிறது.
சோடியமும் மெக்னீசியமும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்தியாவில் பீகாரில்தான் இந்த தாமரை விதைகள் 90 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை நரிக் கொட்டைகள் என்றும் அழைக்கிறார்கள்.
பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் கொட்டைகளை போல் இந்த மக்கானாவிலும் ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கிறது. மக்கானா சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. பீகார் மாநிலம் மதுபானியில்தான் மக்கானா சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பாகிஸ்தான், கனடா, சீனா, மலேசியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இதை பயன்படுத்தும் பழக்கம் வந்தது. 100 கிராம் தாமரை விதையில் புரதம் 9.7 கிராம் உள்ளது. நார்ச்சத்து 145 கிராம், இரும்பு சத்து 1.4 மில்லிகிராம் உள்ளன.
மக்கானாவில் கார்போஹைட்ரேட்டும் இருப்பதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதை உண்பதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதாவது குழந்தையின்மை பிரச்சினையை சரி செய்கிறது. ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. முன்கூட்டியே விந்தணு வெளியேறுவதையும் தடுக்கிறது.
அது போல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் கொழுப்பை குறைக்கிறது. உடல் எடை கூடுவதை கட்டுப்படுத்துகிறது. மேலும் சிறுநீரக இயக்கத்திற்கு உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை அகற்றும் காரணியாக உள்ளது. இதனால் சிறுநீரகம் ஆரோக்கியமாக உதவுகிறது.
அது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. மக்கானா கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. மக்கானா கால்சியம், மெக்னீசியம், புரதங்களின் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அவசியம்.

இந்த மக்கானாவில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளதால் வயதான தோற்றத்தை மறைத்து என்றும் இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. கருவுறுதல் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது. இந்த மக்கானாவில் அதிக இரும்புச் சத்து இருப்பதால் ரத்த சோகையை தடுக்கிறது.இந்த மக்கானாவை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

மக்கானாவில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இதில் பக்க விளைவுகளும் ஏற்படும். அதாவது இதில் ஒவ்வாமை இருக்கிறது. இதனால் சிலருக்கு அரிப்பு, சொறி உள்ளிட்டவை ஏற்படும். சில நேரங்களில் மக்கானாவால் சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications