கோடை காலத்தில் தூக்கம் வர மாட்டேங்குதா.. இதை மட்டும் பண்ணுங்க.. குழந்தை மாதிரி தூங்குவீங்க
டெல்லி: பொதுவாக நம்மால் கோடைக் காலத்தில் நிம்மதியாகத் தூங்க முடியாது. கோடையில் மட்டும் ஏன் இப்படி ஏற்படுகிறது.. இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பருவகாலங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்பது நமது தூக்கத்தைப் பாதிக்கும் என்று ஜர்னல் ஆஃப் ஸ்லீப் ரிசர்ச் இதழ் கூறுகிறது. கோடைக் காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் அது நமது தூக்கத்தைப் பாதிக்கும்.

கோடைக் காலத்தில் நாம் முறையாகத் தூங்குவதை மூன்று முக்கிய விஷயங்கள் தடுக்கிறது. அவை என்ன.. இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதை வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.
காரணங்கள்: முதல் காரணம் அனைவருக்கும் தெரிந்தது தான்- அதீத வெப்பம்.. அதிக வெப்பநிலை உங்கள் உடலைக் குளிர்விப்பதைக் கடினமானதாக மாற்றுகிறது. இதனால் தூங்கும் போது நமக்கு அசௌகரியம் ஏற்படுத்தும். இதனால் உடல் வெப்பத்தைக் குறைக்க வியர்வை ஏற்படுகிறது. இது படுக்கையை ஈரமாக மாற்றுகிறது. இதுவும் நமது தூக்கத்தைப் பாதிக்கிறது.
அதேபோல சம்மரில் பகல் நேரம் நீண்டு இருக்கும்.. இது உடலின் கடிகாரத்தைக் குழப்பி, தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தும். இரவு நேரங்களில் தூக்கம் வராமல் இருக்க இதுவே பிரதான காரணமாகும்.
சூரிய ஒளி: மேலும், வெளிப்புறத்தில் சூரிய ஒளி மறைந்து இருள் சுழல்வதும் நமது தூக்கத்திற்கு முக்கியம். அப்போது தான் தூங்க வேண்டிய நேரம் என்பதை உங்கள் உடலுக்கு உணர்த்தும் மெலடோனின் ஹார்மோன் வெளியாகும்.. கோடைக் காலத்தில் சூரியன் அஸ்தமிக்கவே லேட் ஆகும் என்பதால் மெலடோனின் உற்பத்தி குறையும். இதுவும் தூக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணமாகும்.
டிப்ஸ்: அது சரி.. என்ன செய்தால் நன்றாகத் தூங்கலாம் எனக் கேட்கிறீர்களா.. அதற்கும் சில டிப்ஸ் இருக்கு.. இதை நீங்கள் பின்பற்றினால் சம்மரிலும் குழந்தை போலத் தூங்குவீர்கள். முதலில் தூங்கும் அறையின் வெப்பத்தை கண்ட்ரோலில் வைத்திருங்கள்.. விசிறி அல்லது ஏசி மூலம் அறை வெப்ப நிலையைக் குறைக்கலாம்.. முடிந்த வரை பருத்தி மூலம் செய்யப்பட்ட படுக்கையைப் பயன்படுத்துங்கள்..
நன்றாகத் தண்ணீரைக் குடியுங்கள்.. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அது உங்கள் தூக்கச் சுழற்சியைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, நாள் முழுக்க நிறையத் தண்ணீர் குடியுங்கள். அடுத்துத் தூங்கும் முன்பு ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளைப் பார்க்கக்கூடாது. அதில் இருந்து வரும் ப்ளூ லைட் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கும். தூங்குவதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்பு மொபைல் உட்பட அனைத்தையும் தள்ளி வைத்துவிடுங்கள்.
உடல் குளிர்ச்சியாக இருக்கணும்: உங்கள் கால் பாதத்தைக் குளிர்ச்சியாக வைத்திருங்கள். கால் பாதம் குளிர்ச்சியாக இருந்தால் உடல் வெப்பமும் குறையும். இது தூங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உங்கள் உடலுக்குக் காட்டும். எனவே, தூங்கும் முன்பு காலை குளர்ந்த நீரை ஊற்றி கழுவலாம்.. அடுத்துத் தூங்கும் போது நல்ல லூசான காற்றோட்டம் இருக்கும் ஆடைகளை அணிய வேண்டும். குறிப்பாகப் பருத்தி ஆடைகளை அணியலாம்.. அது நல்ல தூக்கத்தைத் தரும்.
நீங்கள் தூங்கும் ரூமில் தேவையில்லாத சத்தங்கள் வருவதைத் தவிருங்கள். இதுபோன்ற சத்தங்கள் உங்கள் தூக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே தூங்கும் அறையில் அமைதியான ஒரு சூழலை ஏற்படுத்துங்கள்.
பகல் நேரத் தூக்கம்: பகல் நேரத்தில் தூங்குவது, அதுவும் இந்தளவுக்குக் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் போது ஒரு குறுகிய தூக்கம் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பகல் நேரத்தில் அதிகம் தூங்கினால் அது நமது இரவு நேரத் தூக்கத்தைச் சீர்குலைக்கும். பகல் நேரத்தில் நீங்கள் தூங்க வேண்டும் என்றால், 20-30 நிமிடங்கள் மட்டுமே தூங்க வேண்டும். அப்போது அது இரவு தூக்கத்தைப் பாதிக்காது.
எப்போதும் ஒரே நேரத்தில் தூங்கப் படுக்கைக்குச் செல்லுங்கள்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்குத் தூங்கச் செல்லாமல்.. தொடர்ச்சியாக ஒரே நேரத்திற்குத் தூங்கச் செல்லுங்கள். இது நமது உடலுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லது. மேலும், தேவையில்லாத மன அழுத்தம் அல்லது ஸ்டிரேஸ் இருக்கக்கூடாது. மன அழுத்தம் உங்கள் தூக்கத்தைக் கடினமான ஒன்றாக மாற்றுகிறது. உறங்குவதற்கு முன், குளிப்பது, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைச் செய்யலாம். அவை நல்ல தூக்கத்தைத் தரும்.
குழந்தை மாதிரி தூங்குவீங்க: இரவு தூங்கும் போது பிரியாணி போன்ற ஹெவி உணவுகளைத் தவிர்க்கவும்.. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற லேசான உணவுகளைச் சாப்பிடவும். இவை எளிதாக ஜீரணமடையும்.. மேலும், உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலே சொன்ன இந்த 10 டிப்ஸ்களை முறையாக பாலோ செய்யுங்கள் போதும். அதன் பிறகு தினமும் குழந்தை மாதிரி தூங்குவீர்கள்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications