மத்திய அரசு ஊழியர் ஆக சூப்பர் சான்ஸ்.. எஸ்எஸ்சி வெளியிட்ட மெகா அறிவிப்பு.. டிகிரி முடிச்சவங்க விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஐபி உள்ளிட்ட துறைகளில் அஸ்சிஸ்டண்ட் செக்ஷன் ஆபீசர்( குரூப் பி), வரித்துறையில், குரூப் சி பணியிடங்கள் என 37 வகையான பணியிடங்களில் மொத்தம் 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் டிஎன்பிஎஸ்சி போல, மத்திய அரசின் பல்வேறு துறை பணியிடங்களை எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது எஸ்.எஸ்.சி அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது.
அந்த வகையில் தற்போது, 14,582 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஐபி உள்ளிட்ட துறைகளில் அஸ்சிஸ்டண்ட் செக்ஷன் ஆபீசர்( குரூப் பி) , வரித்துறையில், குரூப் சி பணியிடங்கள் என 37 வகையான பணியிடங்களில் மொத்தம் 14,582 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். பொதுவாக டிகிரி முடித்தவர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்கள், கல்வி தகுதி பற்றி முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பார்த்து தேர்வர்கள் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
குரூப் பி நிலை பணியிடங்களுக்கு பே லெவல் 7 விகிதப்படி ஊதியம் வழங்கப்படும். அதாவது, ரூ. 44,900 - ரூபாய் 1,42,400 வரை ஊதியம் அளிக்கப்படும். குரூப் சி நிலை பணியிடங்களுக்கு ரூ.29,200 - முதல் ரூபாய் 92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
கணினி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவை அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்:
தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பிற பிரிவினருக்கு ரூ.100 தேர்வு கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரக்ள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 04.07.2025 கடைசி நாளாகும். முதல் கட்ட தேர்வு நடபெறும் நாள்: 13.08.2025 to 30.08.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cgl_2025.pdf
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications