மாதசம்பளம் ரூ.36,000 டூ ரூ.63,840.. ஆட்களை தேடும் பிஓஐ.. சூப்பர் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா?
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பேங்க் ஆப் இந்தியாவும் ஒன்று.
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,000 ஆயிரம் முதல் அதிகபட்சமாக மாதம் ரூ.63,840 வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பேங்க் ஆப் இந்தியாவும்(Bank Of India or BOI) ஒன்று. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
பேங்க் ஆப் இந்தியாவில் மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் கிரெடிட் அலுவலர் (Credit Officer), ஐடி அலுவலர் (IT officer) என்ற இரு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி கிரெடிட் அலுவலர் பணிக்கு 350 பேரும், ஐடி அலுவலர் பணிக்கு 150 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிகளுக்கு தனித்தனியாக கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்னள. அதன்படி கிரெடிட் அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரியை முடித்திருக்க வேண்டும். ஐடி அலுவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் என்ஜினீயரிங் அல்லது பட்ட மேற்படிப்பில் கம்யூட்டர் சயின்ஸ், கம்யூட்டர் அப்ளிகேசன்ஸ், ஐடி, எலக்ட்ரானிக், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன், எலக்ட்ராகனிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் டிகிரி முடித்து DOEACC ல் B லெவலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு- மாத சம்பளம் என்ன?
கிரெடிட் அலுவலர் மற்றும் ஐடி அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் 20 முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வயது வரையும் வயது தளர்வு உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.36,000 கிடைக்கும். அதிகபட்சமாக மாதம் ரூ.63,840 வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 25ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofindia.co.in/ சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணபப கட்டணமாக ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூ பிரிவினருக்கு ரூ.175 என விண்ணப்ப கட்டணம் உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications