ரூ. 93 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை வங்கியில் வேலை.. டிகிரி முடித்து இருக்கீங்களா.. தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 93 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.

நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் மிகப்பெரிய வங்கியாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா உள்ளது.

job Employment chennai

பணியிடங்கள் விவரம்:

பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வங்கியில் பணியாற்றுகிறார்கள். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த பொதுத்துறை வங்கியில் உள்ள பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாகவும், நேரடியாகவும் நிரப்பப்படுகிறது.

அதேபோல சில பணியிடங்களை வங்கியே நேரடியாக அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் 500 பொது அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பொது அதிகாரி பணியிடங்கள் - மொத்தம் 500

கல்வித் தகுதி

கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கபட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்சி/ எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

சிம்.ஏ/சிஎப்.ஏ/ஐசிடபிள்யூஏ ஆகிய கல்வி தகுதி இருந்தால் முன்னுரிமை தரப்படும். பொத்துறை வங்கி அல்லது ரிசர்வ் வங்கியால் பட்டியலிடப்பட்ட தனியார் துறை வங்கிகளில் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும். கிரெடிட் / கிளை மேலாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்து இருந்தால் விரும்பத்தக்கது.

வயது வரம்பு:

22 வயது முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். ஒபிசி பிரிவினர் என்றால் 35 வயது வரையும், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் என்றால் 38 வயதுவரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?

Generalist Officers பணியிடத்திற்கு ரூ. 64,280 - ரூ. 93,960 வரை சம்பளமாக தரப்படும். ஆன்லைன் எக்ஸாம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.118 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும். விண்ணப்பிக்க வரும் 30.08.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/e09a2a33-7198-4aa5-863a-f08bb9280b80.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+