பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்.. வாயை பிளக்க வைத்த சென்னை,பெங்களூர்.. பட்டதாரிகளுக்கு முன்னுரிமை
டெல்லி: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் இன்டர்ன்ஷிப்களை வழங்குவதில் சென்னை மற்றும் பெங்களூருவில் தனியார் நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. அதைத் தொடர்ந்து டெல்லியை அடுத்து உள்ள குருகிராம் நகரமும், ஹைதராபாத் ஆகியவை இருக்கின்றன. இந்தியாவின்
வர்த்தக தலைநகரான மும்பை இன்டர்ன்ஷிப் வழங்குவதில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னை நிறுவனங்கள் அதிக இன்டர்ன்ஷிப் ஆஃபர்களை வழங்கி உள்ளன.

நாட்டில் வேலையில்லா திட்டம் அதிகரித்து வந்த நிலையில், படித்து முடித்த இளைஞர்கள் சரியான பயிற்சி பெற்று, நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேருவதற்கு அரசே வழிகாட்ட முடிவு செய்தது. எந்த பயிற்சி எடுத்தால் எந்த வேலைக்கு போகலாம், என்ன வேலைக்கு எப்படி ஆரம்பிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் சந்தை எப்படி இருக்கிறது என்பது பற்றி புரிதலை ஏற்படுத்த விரும்பியது. அப்படி பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு நாட்டில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு ஒரு முறை 6000 உதவி தொகையும், மாதம் மாதம் 5000 உதவி தொகையும் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை தேதி முதல் அறிமுகம் செய்தது.
விஜயதசமி தினத்தில் தொடங்கிய பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் , 12 மாத பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான இணையதளத்தையும் மத்திய அரசு அறிவித்துள்து. இந்த திட்டத்தில் சேருவாருக்கு மாதம் மாதம் 5000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு ஓராண்டு அனுப்பிவைக்கப்படும். இதில் 4500 ரூபாய் பணத்தை மத்திய அரசும், நிறுவனம் சார்பில் 500 ரூபாயும் வழங்கப்படும். வேலையில்லாத 21 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பெண்கள் இந்த திட்டத்தில் சேர முடியும். குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நாட்டிலேய அதிகபட்சமாக சென்னையில் உள்ள நிறுவனங்கள் வழங்கி உள்ளன. சென்னையில் உள்ள நிறுவனங்கள் 7,875 இன்டர்ன்ஷிப்களை வழங்க உள்ளன. இதற்கு அடுத்தபடியாக பெங்களூர் நகரில் 5,179, குருகிராமில் 4,576, ஹைதராபாத்தில் 4,472 மற்றும் மும்பையில் 4,288 இன்டர்ன்ஷிப் வாய்ப்பு உள்ளன. பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களின் புள்ளி விவரங்களை நாடு தழுவிய அளவில் பார்த்தால் முதல் 10 மாவட்டங்கள் மட்டுமே 39,200க்கும் அதிகமான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை தருகின்றன. கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி மொத்தம் 127,000 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 35,000 க்கும் மேற்பட்ட இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் அல்லது 28% க்கும் அதிகமான இன்டர்ன்ஷிப்பிற்கு முதன்மையான தகுதி என்பது பட்டப்படிப்பாக உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கே இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை 28 சதவீத நிறுவனங்கள் வழங்க தயாராக உள்ளன. அதேநேரம் அனைத்து இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை ஆராய்ந்து பார்த்தால், கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் பத்தாம் வகுப்பு படித்தவர்களால் இருந்தால் போதும். அதே சமயம் கிட்டத்தட்ட அதே அளவிற்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு ஐடிஐ படித்தவர்களுக்கும் கிடைக்கிறது. 17% டிப்ளமோ படித்தவர்களுக்கும், ஏழு சதவீதம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும்இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்க நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
கடந்த அக்டோபர் 14ம் தேதி நிலவரப்படி பார்த்தால், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு என்று பார்த்தால், ஜூப்லியண் புட்வொர்க்ஸ், ஈச்சர்மோட்டார் லிமிடெட், லார்சன்மற்றும் டர்போ லிமிடெட், டெக் மகேந்திரா, மகேந்திரா அண்டு மகேந்திரா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் முத்தூட் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்டர்ன்ஷிப் வாய்ப்புளை வழங்க தயாராக இருந்தன.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோருக்கு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும். அதிக எண்ணிக்கையிலான இன்டர்ன்ஷிப்களை வழங்கும் முதல் ஐந்து மாநிலங்களில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளன. இந்த இரண்டுமே நாட்டின் சிறந்த மாநில பொருளாதாரம் மிகுந்த மாநிலங்கள் ஆகும். அதற்கு அடுத்தபடியாக குஜராத், கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் இன்டர்ன்ஷிப் வழங்குகின்றன.












Click it and Unblock the Notifications