பிக் பாஸ் தமிழ் 10 வரப்போகுது.. அதுவும் சீக்கிரமாக.. எந்த தேதி தெரியுமா? போட்டியாளர்கள் யார்? லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். என்ன தான் இந்த நிகழ்ச்சியை திட்டி தீர்த்தாலும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போ வரும்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதிலும் கடந்த 9 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது 10வது சீசனுக்கு அப்டேட் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் பலமொழிகளில் ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழில் அறிமுகமாகும் போது பல விமர்சனங்கள் வந்தது. இந்த நிகழ்ச்சியெல்லாம் எப்படி இருக்கும்? அதிலும் இந்த நிகழ்ச்சிக்கு போய் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக வரப் போகிறாரே? அப்படி என்றால் இந்த நிகழ்ச்சியில் என்னதான் இருக்கும்? என்று பல கேள்விகள் இருந்தது. அந்த நேரத்தில் எல்லாம் சோசியல் மீடியாவும் அவ்வளவு பிரபலம் கிடையாது என்பதால் மொத்த ரசிகர்களும் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப காலம்
ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் பக்கத்து வீட்டு சண்டையை பார்ப்பதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்குமோ அதே போல இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என்று பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வப்பட தொடங்கி விட்டனர். அதனாலேயே அடுத்தடுத்த சீசன்களும் வெற்றி அடைய ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சி 2017ல் தொடங்கிய சமயத்தில் ஜூன் மாதம் நிகழ்ச்சி தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும்.
தீபாவளி பண்டிகையை எல்லாரும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே கொண்டாடினார்கள். அப்படி மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும் நான்காவது சீசன் வரும்போது கொரோனா காலகட்டம் என்பதால் அந்த சீசன் மட்டும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு போன சீசன் வரைக்கும் அதையே ஃபாலோ பண்ண தொடங்கி விட்டார்கள் அக்டோபர். அக்டோபர் கடைசியில் தொடங்கி பொங்கல் வரைக்கும் உள்ளே இருக்கிற மாதிரி நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை வித்தியாசமாக தொடங்குகிறார்களாம்.

பிக் பாஸ் தொடங்கப்படும் நாள்
அதாவது இந்த முறை செப்டம்பரில் தொடங்கி அதிலிருந்து 15 நாட்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொள்ளப் போகிறார்களாம். போன சீசனிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய போகிறதா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா நீங்க இந்த பிரபலங்கள் சண்டையை பார்த்தே ஆகணும். 100 நாட்களுக்கு எங்களுக்கும் கண்டன்ட் கிடைத்தே ஆக வேண்டும் என்று இப்போ பிக்பாஸ் புதுசாக போட்டியாளர்களை தேட தொடங்கி விட்டார்களாம்.
விஜய் பற்றி ஆஸ்திரேலியாவில் ரசிகர் சொன்ன வார்த்தை.. டக்குனு திரிஷா செய்த செயல்.. இலங்கை தமிழ் பற்றி பெருமிதம்
அதுவும் வழக்கம் போல சினிமா பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள், சோசியல் மீடியா பிரபலங்களிடம் தான் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. போன முறை அதிகமான சோசியல் மீடியா பிரபலங்களை களம் இறக்கி நிகழ்ச்சியின் சுவாரசியமே போய்விட்டது. அதனால் இந்த முறையாவது சினிமா பிரபலங்கள் வரவழைத்து நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்குங்க பாஸ் என்று பலர் இப்போதே வேண்டுகோள் வைக்கிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 அப்டேட்
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் வாய்ப்புகள் பெரிதாக இல்லாத சினிமா நடிகர்கள் அல்லது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களையே இந்த நிகழ்ச்சியில் போட்டிருந்தார்கள். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் போன சீசனில் சோசியல் மீடியா பிரபலங்களை கூப்பிட்டு அவர்கள் வெளியே எப்படி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்தார்களோ அப்படித்தான் தான் உள்ளே போயும் ரீல்ஸ் போட்டார்கள்.
ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத திருநங்கை.. முதலமைச்சர் விஜய் சார்பாக கிடைத்த மறக்க முடியாத கிஃப்ட்
அதனால் பலருக்கு போர் அடித்து விட்டது. இந்த சீசனிலாவது நிகழ்ச்சியை எப்படி சீக்கிரமாக தொடங்குகிறார்களோ அதே போல ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி போட்டியாளர்களை கொண்டு வருகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதுபோல இந்த சீசனிலும் வழக்கம் போல விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாராம்.












Click it and Unblock the Notifications