கோவை பேரூர் கோயிலில் வேலை! 8 ஆம் வகுப்புதான் கல்வி தகுதி.. அறநிலையத்துறை கொடுத்த சூப்பர் சான்ஸ்
சென்னை: கோவை பேரூரில் உள்ள பட்டீசுவரசாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் நர்சிங் அசிஸ்டெண்ட் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 02.12.2025 மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
மருத்துவர்: 01
செவிலியர்: 02
நர்சிங் அசிஸ்டெண்ட்: 02
மொத்தம் 05 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி & சம்பளம்:
* மருத்துவர் பணிக்கு எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.36,700 - 1,16,200 வரை சம்பளம் வழங்கப்படும். செவிலியர் பணிக்கு டிப்ளமோ பொது நர்சிங் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.19,500 - 62,000 வரை வழங்கப்படும்.
* நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.11,600 - 36,800 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவர் மற்றும் நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை படித்த பிறகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், https://hrce.tn.gov.in மற்றும் https://perurpatteeswarar.hrce.tn.gov.in முகவரிகளில் "அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்" என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் அரசு விடுமுறை அல்லாத நாட்களில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
பேரூர், பேரூர் வட்டம்,
கோவை மாவட்டம் - 641010
இதர விவரங்கள்:
* திருக்கோயிலில் இருந்து நேர்காணலில் கலந்து கொள்ள அனுப்பப்படும் நேர்காணல் கடிதத்தை விரைவு தபாலில் பெறுவதற்கு ஏதுவாக விண்ணப்பதாரரின் சுயவிலாசமிட்ட தபால் உறையில் சுமார் ரூ.70 (ரூபாய் எழுபது மட்டும்) தபால் தலைகள் ஒட்டப்பட்டு இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
* வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
* நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளுக்குட்பட்டவை.
* விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
* விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவுபெற்ற அலுவலர் சான்றொப்பம் பெற்ற புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக் கூடாது.
* ராஜீயத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://perurpatteeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php












Click it and Unblock the Notifications