மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. தமிழ் தெரிந்தவங்களுக்கு ஜாப்.. 63 ஆயிரம் சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நாட்டில் மிகவும் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக NICL -எனப்படும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கக் கூடிய 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Central Government Job Job employment


பதவியின் பெயர்:

* உதவியாளர்- 500

காலியிடங்கள் விவரம்:

ஆந்திரப் பிரதேசம் - 14 பணியிடங்கள்
அருணாச்சலப் பிரதேசம் - 05
அசாம் - 18
பீகார் - 12
சத்தீஸ்கர் - 18
கோவா - 02
குஜராத் - 34
ஹரியானா - 03

இமாச்சலப் பிரதேசம் - 02
ஜார்க்கண்ட் - 10
கர்நாடகா - 30
கேரளா - 35
மத்தியப் பிரதேசம் - 18
மகாராஷ்டிரா - 57

மேகாலயா - 02
மிசோரம் - 02
நாகாலாந்து - 01 பணியிடம்
ஒடிசா - 16
பஞ்சாப் - 10
ராஜஸ்தான் - 36
சிக்கிம் - 01 பணியிடம்
தமிழ்நாடு - 49
தெலுங்கானா - 15

திரிபுரா - 02
உத்தரப் பிரதேசம் - 24
உத்தராகண்ட் - 08
மேற்கு வங்கம் - 46
சண்டிகர் (யூனியன் பிரதேசம்) - 04
டெல்லி (யூனியன் பிரதேசம்) - 20
ஜம்மு மற்றும் காஷ்மீர் - 04
புதுச்சேரி (யூனியன் பிரதேசம்) - 02

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை எழுத, படிக்க, பேச தெரிந்து இருப்பது கட்டாயம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 49 பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே சேர முடியும்.

வயது வரம்பு:

01.07.2026- தேதிப்படி 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.07.1996-க்கு முன்பாகவோ, 01.07.2005 க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது.

அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை உண்டு. எஸ்சி பிரிவினர் என்றால் 35 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 33 வயது வரையும் விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் எவ்வளவு?

உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.63 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் வழியாக இரண்டு கட்ட எழுத்து தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. விண்னப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் 18.07.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.08.2026 ஆகும். ஆன்லைன் முதல் கட்ட தேர்வு, 27.08.2026 அன்றும், ஆன்லைன் இரண்டாம் கட்ட தேர்வு 30.10.2026 அன்றும் நடைபெறலாம்.
நேர்முகத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க: https://nationalinsurance.nic.co.in/sites/default/files/2026-07/NICL%20ASSISTANT%20-%20Recuritment%20Advertisment%202026-27%20%28Final%29.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+