கோவை மாவட்ட ரேஷன் கடைகளில் வேலைக்கு ஆட்கள் தேர்வு.. நல்ல சம்பளம்.. கூட்டுறவு சங்கம் அழைப்பு
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (சேலஸ்மேன்) மற்றும் கட்டுநர்கள் (பேக்கர்) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து https://www.drbcbe.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது.
கோவை வட்டத்தில் 1,253 முழுநேர நியாய விலைக்கடைகள், 289 பகுதி நேர நியாய விலை கடைகள் மொத்தம் 1,542 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் 11 லட்சத்து 41 ஆயிரம் 886 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 34 லட்சம் மக்கள் கோவை மாவட்டத்தில் ரேஷனில் பொருட்கள் பெற்று பயன்பெற்று வருகிறார்கள். புதிதாக சுமார் 5000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. பொதுவாக ரேஷன் கடைகள் என்பது மக்கள் தொகையின் எண்ணிக்கையில் அதிகரிக்கப்படும். அதேபோல் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (சேலஸ்மேன்) மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கூட்டுறவுச்சங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 129 விற்பனையாளர்கள் மற்றும் 70 ஓட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://www.drbcbe.in/ என்ற இணையதளம் வழியாக மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது.
இதற்கான கல்வி தகுதி , வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் https://www.drbcbe.in/ விண்ணப்பிக்கலாம்" என்று கோவை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் கூறியுள்ளார்.
சம்பளம் எவ்வளவு: நியாயவிலைக்கடை விற்பனையாளர் . தொகுப்பு ஊதியம் ரூ.6250 (நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை), ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.8600-29000.
நியாயவிலை கடை விற்பனையாளர் காலிப்பணியிட விவரம்: மொத்த விற்பனை பண்டக சாலை 1, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 91, தொடக்க கூட்டுறவு பண்டங்க சாலை 12, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 20, நகர கூட்டுறவு சங்கம் 5 என மொத்தம் 129 காலிப்பணியிடங்கள் உள்ளன.
நியாய விலைக்கடை கட்டுனர் (பேக்கர்) பணியிடத்தினை பொறுத்தவரை தொகுப்பு ஊதியம் ரூ.5500/ நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.7800-26000 வழங்கப்படும். காலியிடங்களை பொறுத்தவரை மொத்த விற்பனை பண்டக சாலை 3. தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கம் 10, தொடக்க கூட்டுறவு பண்டக சாலை 10, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் 34, நகர கூட்டுறவு கடன் சங்கம் 13 என மொத்தம் 70 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்கள் என்பது இறுதியல்ல. இதுதற்காலிகமானது மட்டுமின்றி, மாறுதலுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலை கடை விற்பனையாளர் காலிப்பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், நியாய விலைக்கடை கட்டுனர் (பேக்கர்) பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 18 வயது நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அதேநேரம் ஓசிக்கு மட்டும் 32 வயது வரை தான் விண்ணப்பிக்க முடியும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications