Arts and Science படித்திருந்தால் போதும்.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் எச்சிஎல்! நாளை இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிகிரி படிப்பை முடித்தோருக்கு ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை (செப்டம்பர் 4) நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Fresher Process Associate Banking Domain பிரிவில் ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கான கல்வி தகுதிகள் பற்றிய முழு விவரம் வருமாறு:
இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 4) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அந்த நேரத்துக்கு முன்பாக HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chenani என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face to Face முறையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இந்த இண்டர்வியூவில் பங்கேற்போருக்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்திருந்தால் சிறப்பு. அதாவது பிகாம், பிஏ, பிஎஸ்சி என்று எந்த பிரிவில் படிப்பை முடித்திருக்கும் பட்சத்தில் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இதுதவிர 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கடைசி செமஸ்டர் ரிசல்ட் இன்னும் வராத நிலை உள்ளது. இதனால் ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
மற்றபடி பிஇ, பிடெக் பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்தவர்கள், எம்எஸ்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications