இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. 34,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. தேதி முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளா திருச்சி அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் எழுத்தர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அறநிலையத்துறையால் நிரப்பப்படுகின்றன. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது, திருச்சியில் உள்ள அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் எழுத்தர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

job jobs employment

பணி விவரம்: திருச்சி ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஒரு எழுத்தர் (கிளார்க்) பணியிடம் நிரப்பப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும், 45 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: எழுத்தர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதார்களுக்கு மாதம் ரூ. 10,700 முதல் 33,700 வரை வழங்கப்படும். தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆஃப்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?: thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும். பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை விண்ணப்ப படிவத்தில் ஒட்டுவது அவசியம்.

இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:
* பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்ற நகல்
* ஆதார் அட்டை நகல்
* இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்றிதழ்
* கல்வி சான்று நகல்
* நன்னடத்தை சான்று நகல்
* அனுபவ சான்று நகல்
* சுய விலாசிமிட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

பிற நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் இந்து மதத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர் இந்த திருக்கோயிலின் உப கோயில்களுக்கும் பணியிட மாறுதல் செய்யப்படுவார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.09.2024 ஆகும். இன்னும் 5 நாட்களே இருப்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், - 620005. தொலைபேசி எண் : 04312230257. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+