வங்கியில் வேலை.. 550 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 550 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில், மொத்தம் உள்ள 550 பணியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 130 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த சான்சை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) உள்ளது. நாடு முழுவதும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. நாட்டில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றாக விளங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாகவும், பயிற்சி பணியிடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான 550 பயிற்சி பணியிடங்களை (Apprentices) நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?, கல்வி தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 550 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை 130 ஆகும். புதுவையில் 14 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவில் 25 பணியிடங்களும், கர்நாடகாவில் 50 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். 1.04.2020 - 01.08.2024க்குள் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: அப்ரெண்ட்டீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மெட்ரோ நகரங்கள் என்றால் மாதம் ரூ.15 ஆயிரமும், நகரங்களில் 12 ஆயிரமும், கிராமப்புற பகுதிகளில் ரூ.10 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு என்ன?: வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சம் வயது வரம்பு 28க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினர்/ஒபிசி/ பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு ரூ.944 செலுத்த வேண்டும். பெண்கள் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 708 கட்டணம் ஆகும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் தேர்வுக் கட்டணமாக ரூ.472 செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக்கொள்ளவும். விண்ணப்பிக்க இன்று அதாவது 10.09.2024 கடைசி நாள் ஆகும். ஆன்லைன் தேர்வு வரும் 22.09.2024 (Tentative) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.iob.in/upload/CEDocuments/iobApprentices_Web_Ad_Final_28082024.pdf
செய்யவும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் https://bfsissc.com/ செய்யவும்.












Click it and Unblock the Notifications