இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை.. 1 லட்சம் வரை சம்பளம்! பிளஸ் டூ, டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ணுங்க
சென்னை: இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ, பிளஸ் டூ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 23,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் நிறுவனம். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் வணிக நிறுவனமாகும். இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் & கல்வி தகுதி: ஜூனியர் ஆபரேட்டர் பதவிக்கு 246 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஐடிஐ, 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. ஜூனியர் ஆபரேட்டர் கிரேடு 1 பணிக்கு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தப் பட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
ஜூனியர் அட்டண்டண்ட் கிரேடு 1 பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். பணி அனுபவம் அவசியம் இல்லை.
ஜூனியர் பிசினஸ் அசிஸ்டண்ட் கிரேடு III- பணிக்கு விண்ணைப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். குறைந்தபட்சம் 45 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எம்.எஸ். வேர்டு, எக்செல் & பவர் பாயிண்ட் ஆகியவற்றில் அடிப்படை அறிவு அவசியம்.
ஒரு நிமிடத்திற்கு 20 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் அவசியம். கல்வித் தகுதி பற்றிய முழுமையான மற்றும் தெளிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அவசியம் அதை படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்களும் 26 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு:
ஜூனியர் ஆபரேட்டர் Grade I: ரூ. 23,000 - 78,000/-
ஜூனியர் அட்டண்டண்ட் Grade I; ரூ. 23,000 - 78,000/-
ஜூனியர் பிசினஸ் அசிஸ்டண்ட்Grade III: ரூ 25,000 - 1,05,000/-
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, திறன் தேர்வு / உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 03.02.2025 காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2025 அன்று இரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/613feac7e44444bb91a7d6b610014b16.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications