8 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் கண்காணிப்பில் உள்ள முள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.

மொத்த பணியிடங்கள்: கதிர்ப்பட உதவியாளர் (Radiographer) 04 பணியிடங்கள், அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர்-01 பணியிடம், ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் -01 பணியிடம், சுகாதார பணியாளர்-01 பணியிடம், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் -01 பணியிடம், பாதுகாவலர் 01 பணியிடம் என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: கதிர்ப்பட உதவியாளர் பணியிடத்திற்கு எம்.ஆர்.பி விதிகளின் படி பி.எஸ்.சி (ரேடியோகிராபி) பட்டம் முடித்து இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 மாதங்கள் கொண்ட OT டெக்னிஷியன் கோர்ஸ் முடித்து இருக்க வேண்டும்.
ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் பணியிடத்திற்கு எம்.எஸ்.சி ( Disability studies / ASLP)/MBBS/BAMS/BHMS உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெறிருக்க வேண்டும். இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம். சுகாதார பணியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பாதுகாவலர் ஆகிய பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிப்பது எப்படி?: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில், 01.09.2023 முதல் 12.09.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களை தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் சமர்பிக்கலாம். வயதுவரம்பை பொறுத்தவரை 45-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது . கதிர்பட பதிவாளர் பணியிடத்திற்கு 13,300, அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் பணிக்கு 11,200, ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் பணிக்கு ரூ.17,000 வழங்கப்படும். சுகாதார பணியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பாதுகாவலர் ஆகிய பணியிடத்திற்கு ரூ.8 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?: மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை அலுவலகத்தில் நேரிவோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023. அதபின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு அறிவிப்பாணையை தெரிந்து கொள்ள இந்த லிங்கை https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/08/2023083123.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications